ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன்.. சசிகலா பெயரில் போலி ட்விட்டர் கணக்கு!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய திருமதி.சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என அக்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தற்போதும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தான் என அவர் தரப்பினர் பேசி வருகின்றனர். அதற்கான சட்ட நடவடிக்கையை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் சகோதரர் ஸ்டாலின் உடைய பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன் என சசிகலா ட்விட்டரில் பதிவிட்டதாக அதன் ஸ்க்ரீன்ஷார்ட் மற்றும் தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை உண்மை என்ன நினைத்து திமுகவினர் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், அந்த ட்விட்டர் பக்கம் உண்மையானது அல்ல.
இது சசிகலா பெயரில் இயக்கி வரும் போலியான பக்கமே. ட்விட்டர் தகவலில், parody, sister of A1 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ பக்கங்கள் இல்லை.
சிறை தண்டனை நிறைவடைந்து தமிழகம் திரும்பிய பிறகு, ” பொது எதிரியை ஆட்சிக்கு வர விடக்கூடாது, ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் ” என சசிகலா தெரிவித்து இருந்தார். அவர் பொது எதிரி எனக் கூறியது எதிர் கட்சியான திமுகவை தான்.
முடிவு :
நம் தேடலில், சகோதரர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன் என சசிகலா ட்வீட் செய்ததாக பரவும் தகவல் போலியானது, அந்த ட்விட்டர் பக்கம் பகடி பதிவுகளை வெளியிட்டு வருகிறது என அறிய முடிகிறது.