This article is from Feb 08, 2021

சசிகலா ஆதரவு சமூகம் குற்றப்பரம்பரையினர் என சி.வி.சண்முகம் கூறியதாக வதந்தி !

பரவிய செய்தி

சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்டவர்கள். குற்றச் செயல்கள் புரிவது அவர்கள் ரத்தத்திலேயே இருக்கிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வி.கே.சசிகலா பலமாக கருதும் சமூகம் குற்றப்பரம்பரையினர் எனக் கூறியதாக நாரதர் மீடியா எனும் முகநூல் பக்கத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தலத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, நாரதர் மீடியா முகநூல் பக்கங்களை ஆராய்கையில், அப்படி எந்தவொரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. மேலும், பரப்பப்படும் நியூஸ் கார்டில் லோகோ மற்றும் தேதி என எதுவும் இல்லை. எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு எனத் தெளிவாய் புரிகிறது.

பிப்ரவரி 6-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம், சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக பரபரப்பாக பேசி இருந்தார். இதையடுத்தே, இப்படியொரு எடிட் நியூஸ் பரப்பப்பட்டு உள்ளது.

Twitter link | Archive link 

இந்நிலையில், ” சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சில சமூகத்தினரை விமர்சனம் செய்து பேசியதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவுகிறது. அதிமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த இதுபோன்ற தவறான நோக்கத்தோடு அரசியல் எதிரிகள் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி ” என அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader