சாத்தான்குளம் சம்பவத்திற்கு சவூதி இளவரசர் ட்வீட் என நையாண்டிப் பதிவு !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் இருந்த தந்தை மற்றும் மகன் இறப்பிற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்தும், நீதி கேட்டும் கருத்துக்களை பதிவிட்டு வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அவர்களின் இறப்பை வைத்து அரசியல் சார்ந்த வதந்திகளும், மதம் சார்ந்த பாகுபாடுகள் மற்றும் நையாண்டிப் பதிவுகள் பரவி வருகின்றன.
மானமுள்ள முஸ்லீம் நாடார்கள் எனும் பக்கத்தில், ” சாத்தான்குளம் சம்பவத்திற்கு இளவரசர் முகமதுபின் சல்மான் நாடார் டுவிட் ” என நியூஸ் 18 தமிழ் உடைய செய்தியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இதை சாதாரணப் பதிவாக கடந்து செல்ல முடியவில்லை. இதை சில முகநூல் குழுக்களில் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிந்தது.
இது நையாண்டிக்காக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பதிவு. உண்மையில், ” அந்த குடும்பத்தின் வலியை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. குற்றவாளி தப்பித்துவிடக்கூடாது ” எனக் கூறியது நடிகை பிரியங்கா சோப்ரா. ஜூன் 27-ம் தேதி பிரியங்கா சோப்ராவின் கருத்து நியூஸ்18 தமிழில் செய்தியாக வந்துள்ளது. அதில் சவூதி இளவரசரின் புகைப்படத்தை வைத்து மாற்றியுள்ளனர்.
ஜூன் 26-ம் தேதி பிரியங்கா சோப்ரா ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்பிற்கு நீதிக்கேட்டு தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
#JusticeForJayarajandBennicks pic.twitter.com/vGi8m63If2
— PRIYANKA (@priyankachopra) June 26, 2020
அந்த முகநூல் பக்கத்தில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பல நையாண்டிப்பதிவுகள் பதிவாகி இருக்கின்றன. இது முற்றிலும் தவறான செயல்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.