This article is from Jun 29, 2020

சாத்தான்குளம் குடும்பம் ஸ்டாலினுடன் இருப்பதாக வதந்தி புகைப்படம் !

பரவிய செய்தி

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் எங்கயோ இடிக்குதே ?

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

சாத்தான்குளத்தில் வணிகக்கடையை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கண்டனத்தைப் பெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் இறப்பு உடன் அரசியல் சார்ந்தும் தவறான கருத்துக்களை பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

Twitter link | archive link 

Facebook link | archive link 

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பம் ஸ்டாலினை சந்தித்து உள்ளதாகவும், இது எங்கயோ இடிக்கிறதே என இப்புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்புகைப்படம் குறித்த உண்மையை விளக்குமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

சாத்தான்குளம் குடும்பம் என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி tnvsp.blogspot.com எனும் வலைப்பதிவு தளத்தில் ” வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகள் திருமணம்: கருணாநிதி, வைகோ, ஜி.கே.வாசன் வாழ்த்து ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

மற்றொரு வலைப்பதிவில் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவி உடன் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குடும்பத்தினர் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

மஞ்சள் நிற உடையில் இருக்கும் நபரையே பென்னிக்ஸ் என வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடைய புகைப்படத்தையும், விக்கிரமராஜா குடும்பத்தினரின் புகைப்படத்தையும் ஒற்றுமைப்படுத்தி காண்பித்து உள்ளோம்.

மேலும் படிக்க : ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடுமை செய்யப்பட்ட காட்சி என பரவும் தவறான வீடியோ !

சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பை அரசியல்படுத்தியதோடு, அவர் குடும்பத்தினரையும் ஸ்டாலின் உடன் இருப்பதாக வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற வதந்திகள் சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்கும் குரலை மறைக்கவும், இழிவுப்படுத்தும் செயலாகும்.

முடிவு : 

நம்முடைய தேடலில், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பம் மு.க. ஸ்டாலின் உடன் இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் தவறானது. அது வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட குடும்பத்தினரின் புகைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader