சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க ராஜவேல் நிதி கேட்டதாகப் பரவும் போலி ட்வீட் !

பரவிய செய்தி

அதிகார வர்க்கத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள துரைமுருகனை பிணையெடுக்க டெல்லியிலிருந்து சிறப்பு வழக்கறிஞர்களை கூட்டி வரத் திட்டம். மனமும் உழைக்க வலுவும் உள்ளது ஆனால் நிதிவசதி இல்லை. தாய்த்தமிழ் உறவுகள் மீதான நம்பிக்கையில்

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கி இருந்த விடுதியில் தரமற்ற உணவு உண்டதால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் வதந்தி பரப்பியதாகக் கூறி கைது செய்தது காவல்துறை. இந்த வருடத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படுவது மூன்றாவது முறை. இதற்கு முன்பும் பிணையில் வெளியே வந்தார்.

Twitter link 

இந்நிலையில், சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க டெல்லியில் இருந்து வழக்கறிஞர்களை அழைத்து வர மக்களிடமும், கட்சியினரிடமும் நீதி கேட்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளரும், பேசு தமிழா பேசு யூடியூப் சேனலை நடத்தி வரும் ராஜவேல் நாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டதாக ஓர் ட்வீட் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் ஸ்க்ரீன்சார்ட் அனைத்திலும் நேரம், லைக், கமெண்ட் ஆகியவை ஒரே  மாதிரியாகவே இருக்கின்றன. மேலும், ராஜவேல் நாகராஜன் ட்விட்டர் பக்கத்தில், துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்கும் ட்வீட் ஏதும் இடம்பெறவில்லை. மாறாக, தன்னுடைய பெயரில் போலியான ட்வீட் பரவி வருவதாக பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link  

” இப்படி நான் போடாத ஒரு ட்வீட்டை போட்டோஷாப் செய்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதை திட்டமிட்டு பகிர்ந்திருக்கும் ஐடிக்களை பார்ரத்தாலே தெரியும் அவர்களின் வன்மம் ஏன் என! உள்நோக்கத்தோடு இதை பரப்பிய நபர்கள் மேல் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் ” என ராஜவேல் நாகராஜன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Please complete the required fields.




Back to top button