சவூதி அரேபியாவில் நாத்திகம் பேசியவருக்கு மரண தண்டனையா ?

பரவிய செய்தி

கடவுள் மறுப்பு கொள்கையான நாத்திகம் பேசினால் மரண தண்டனை விதிக்கப்படும்- சவூதி அரேபியா அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

சவூதி அரேபியாவில் நாத்திகம் சார்ந்த கருத்துகளை பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில், 2015-ல் அஹமத் அல் ஷம்ரி என்பவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது அந்நாட்டு மக்களாலே கொண்டாடப்பட்டது.

விளக்கம்

சவூதி அரேபியாவில் செய்யும் குற்றங்களுக்கான தண்டனை கடுமையானதாக இருக்கும் என கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை பேசியவருக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

2014 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் ஹஃபர்-அல்-பட்டின் நகரத்தில் வசித்து வந்த அஹமத் அல் ஷம்ரி என்பவர் அந்நாட்டின் சமயத்திற்கு எதிரான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும், அதில் இஸ்லாம் மற்றும் அவர்களின் தீர்க்கதரிசியான மொஹமத் ஆகியவற்றை துறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசியதாகவும் கைது செய்யப்பட்டார்.

நாத்திகம் மற்றும் இறை பழி ஆகிய இரு காரணங்களுக்காக அஹமத் அல் ஷம்ரி கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் வழக்கின் விசாரணையில் அஹமத் அல் ஷம்ரி-க்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தன் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டில் இருமுறை முயன்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு எதிராகவே இருந்துள்ளது. அஹமத் அல் ஷம்ரி மரண தண்டனை பற்றிய கதை நீண்ட வருடங்களாக பல நாடுகளில் பகிரப்பட்டு வருகிறது.

சவூதி அரேபியாவில் நாத்திகம் பேசுபவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளத்தில் நூற்றுக்கும் அதிகமான பதிவுகளில் கடவுள் மறுப்பு எண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000 கசையடியும் அளித்து உள்ளனர்.

சவூதி அரேபியாவின் மனித உரிமை பதிவுகளுக்கு எதிராக சர்வதேச மனித உரிமை வாட்ச்டாக் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருகிறது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் போன்று, சமய எதிர்ப்பிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அங்கு சமய எதிர்ப்பு கடுமையான தண்டனைக்கு உரியதாக இருந்து வருகிறது.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button