சவுதி அரேபியா அரசு மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைக்க தடை செய்ததாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

சவுதி அரேபியாவில் கூட முஸ்லிம்களுக்கு லவுடு ஸ்பீக்கர் வைக்க தடையாம் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரே! கோவில்கள் பக்கத்தில் வேண்டுமென்றே தினமும் லவுட் ஸ்பீக்கரில் நமாஸ் செய்கிறார்களாம் தமிழகத்தில்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மீபத்தில் கர்நாடகா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா மங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசிய போது, பள்ளிவாசலில் இருந்து வரும் தொழுகை அழைப்பு (ஆஷான்) எனக்கு தலைவலியாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இது விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு நாடு முழுவதிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த நிலையில், வலதுசாரி சமூக வலைதள பக்கங்களில் சவுதி அரேபியாவிலேயே முஸ்லீம்கள் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் வைக்க தடை செய்து உள்ளதாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link

சவுதி அரேபியாவில் இந்தாண்டு வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை வைக்க தடை செய்து உள்ளதாக ஆங்கில செய்திகளிலும் வெளியாகி வருகிறது. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சஜன்ய(Panchjanya) பத்திரிகை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

உண்மை என்ன ? 

சவுதி அரேபியாவில் முஸ்லீம்களுக்கு ஒலிப்பெருக்கிகள் வைக்க தடை எனும் பதிவின் உண்மைத்தன்மையை குறித்து ஆய்வு செய்தபோது, மார்ச் 3ம் தேதி சவுதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் புனித ரமலான் மாதத்திற்கான ஏற்பாடு மற்றும் கட்டுப்பாடுகளை அந்நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறையாக அறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

Twitter link

அந்த அறிக்கையில் ஒலிப்பெருக்கிகள் குறித்தான எந்த ஒரு தடையும் குறிப்பிடப்படவில்லை.  மேலும், இதுகுறித்து மேற்கொண்டு தேடிய போது, Gulf News இணையதளத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில் சவுதி அரேபியா அரசு இமாம்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் புனித ரமலான் மாதத்தில் மசூதிகளில் நான்கு ஒலிப்பெருக்கிகள் மட்டுமே தொழுகை அழைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாகவே வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : No, Saudi Arabia did not ban the installation of loudspeakers in mosques.

இதற்கு முன்பாக சவுதி அரேபியாவில் உள்ள மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளைப் நிறுவ தடை செய்ததாக பரவிய வதந்திகள் குறித்து யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க :  சவுதி அரேபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயமாக்கப்பட்டதாக பரவும் தவறான தகவல் !

இதேபோல், சவுதி அரேபியாவில் அனைத்து முஸ்லீம்களுக்கும் யோகா கட்டாயம் ஆனதாக பரப்பப்பட்ட தவறான தகவல் குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு :

நம் தேடலில், சவுதி அரேபியாவில் முஸ்லீம்கள் ஒலிப்பெருக்கிகள் வைக்க தடை விதிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது. அதுபோல் எந்த ஒரு தடையும் மசூதிகளுக்கு பிறப்பிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button