சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு சத்தம் கேட்டு பயந்து ஓடியதாக பரவும் வதந்தி.. உண்மை என்ன ?

பரவிய செய்தி

சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வந்தார்.அவரை வரவேற்க பட்டாசு வெடிக்கும் என்று சவுதி அரேபிய அமைச்சருக்கோ அல்லது அவரது ஊழியர்களுக்கோ தெரிவிக்க சீனர்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.வேடிக்கை பாருங்கள்..

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சவூதி நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரியாத்தில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சீன புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்குச் சென்றபோது அவரை வரவேற்கச் சீன நாட்டுப் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காமல் சென்று விட்டார் என இவ்வீடியோ தற்போது இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் பரவும் சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் குறித்தான வீடியோ உண்மையில் ரியாத்தில் நடைபெறவில்லை. இதுகுறித்து, குவைத்து நாட்டில் உள்ள அல்-ஹதீத் என்ற செய்தி சேனல் டிசம்பர் 12, 2019 தேதி அன்று செய்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Twitter link 

இந்நிகழ்வு வளைகுடா பாதுகாப்பு மற்றும் ஏவியேசன் கண்காட்சியில் அமிரி காவலர்களின் இராணுவ பயிற்சி நிகழ்ச்சியின் வீடியோ என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவ்வீடியோவானது குவைத்தில் பாதுகாப்பு வீரர்களின் ஒத்திகையில், தாக்குதலின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வு நடக்கும் போது அங்குள்ள மக்கள் செல்போனில் வீடியோக்கள் எடுப்பதை பார்க்கலாம்.

முடிவு :

நம் தேடலில், சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சர் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக சீனத் தூதரகத்திற்கு வந்த போது பட்டாசு வெடித்ததை கண்டு பாதுகாப்பு வீரர்களுடன் அங்கிருந்து ஓடியதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. இவ்வீடியோ குவைத் நாட்டில் நடைபெற்ற இராணுவ பயிற்சி ஒத்திகை நிகழ்வு என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader