சிபிஐ சம்மனுக்கு பதில் அளிக்காமல் சவுக்கு சங்கர் தலைமறைவு எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
ஜி ஸ்கொயர் மற்றும் சபரிசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சோதனை செய்ததில் எதுவும் கிடைக்காததால், உரிய ஆதாரத்துடன் தங்கள் அலுவலகத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு CBI சம்மன். சம்மனுக்கு பதில் அளிக்காமல் சவுக்கு சங்கர் தலைமறைவு.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் பல்வேறு சோதனைகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 10 அதிகாரிகளுக்கு தொடர்பான இடங்கள், செட்டிநாடு குழுமம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேநேரத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜிஸ்கொயருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த சவுக்கு சங்கர், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் சிபிஐ சம்மனுக்கு பதில் அளிக்காமல் தலைமறைவாக உள்ளதாக ஏபிபி நாடு சேனலின் நியூஸ் கார்டு ஒன்றை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஏண்டா பெரிய புளுகு வேட்டறை சவுக்கு எப்போ போய் ஆஜர் ஆக போற? @savukku @veer284 pic.twitter.com/m4j6fT2pCL
— CSK கலைஞர் பாஸ்கர் 🌄 தமிழ்நாடு(இந்திய ஒன்றியம்) (@BaskerSerode) May 2, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து ABP நாடு செய்தி நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், மே 2ம் தேதி பரப்பப்படும் நியூஸ் கார்டு ABP நாடு பக்கங்களில் இடம்பெறவில்லை.
#JUSTIN | கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு https://t.co/wupaoCzH82 | #KarnatakaElections2023 #RahulGhandi #shivarajkumar #Congress pic.twitter.com/qD7R8r1m2h
— ABP Nadu (@abpnadu) May 2, 2023
மே 2ம் தேதி ABP நாடு, ” கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு ” என்ற தலைப்பில் வெளியிட்ட நியூஸ் கார்டே கிடைத்தது. மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார். நியூஸ் கார்டில் வாட்டர் மார்க் அழிக்கப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.
ட்விட்டரில் தொடர்ந்து இயங்கி வரும் சவுக்கு சங்கர் குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் பார்க்கையில், மே 3ம் தேதியான இன்றும் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.
Kindly take a look @CMOTamilnadu https://t.co/yimxaRsPmQ
— Savukku Shankar (@Veera284) May 3, 2023
மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !
இதற்கு முன்பாக, சவுக்கு சங்கர் பரப்பிய பொய்யான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகள் தொடர்பான கட்டுரையும் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : திமுக எம்பிக்கள் குரூப் போட்டோவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் என சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !
முடிவு :
நம் தேடலில், ஜி ஸ்கொயர் விவகாரத்தில் சிபிஐ சம்மனுக்கு பதில் அளிக்காமல் சவுக்கு சங்கர் தலைமறைவு எனப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.