This article is from Dec 01, 2018

SBI-யின் டெபிட் & கிரெடிட் கார்டுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.

பரவிய செய்தி

டிசம்பர் 31-ம் தேதிக்குள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளவும். 2019 ஜனவரி 1-ல் இருந்து பழையக் கார்டுகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

2018 டிசம்பர் 31-க்குள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் Magstripe கார்டுகளுக்கு பதிலாக “ Europay, Mastercard, visa “ (EMV) chip பொருந்திய கார்டுகள் எஸ்.பி.ஐ வங்கியில் இலவசமாக வழங்கப்படுகிறது.

விளக்கம்

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதாவது, எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது உபயோகித்து வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை 2018 டிசம்பர் 31க்கு பிறகு பயன்படுத்த முடியாது என்ற தகவல் மக்களிடையே ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதற்கான காரணத்தையும் எஸ்.பி,ஐ அளித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட உத்தரவை பின்பற்றி எஸ்.பி.ஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் Magstripe-ஐ கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பதிலாக “ Europay,Mastercard, visa “ (EMV) chip மற்றும் PIN-ஐ மையமாகக் கொண்டு (PoS) செயல்படும் புதிய கார்டுகளை வழங்க உள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருந்து மக்களின் பணம் திருடப்படுவதை தடுக்கவே EMV chip முறையை கொண்டு வந்துள்ளதாகவும், Magstripe முறையை விட EMV chip முறை மிகவும் பாதுகாப்பானது எனவும் RBI அறிவித்து உள்ளது.

இதற்கு முன்பாகவே 2016-ம் ஆண்டில் RBI, வங்கிகளில் புதியக் கணக்கை தொடங்குபவர்களுக்கு EMV chip-ஐ மையமாகக் கொண்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டும் என உத்தரவு விட்டது.

EVM chip-ஐ கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இறுதி நாட்களில் சென்று தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பதற்கு டிசம்பர் 31க்கு முன்பே வாடிக்கையாளர்கள் தங்களின் Magstripe டெபிட், கிரெடிட் கார்டுகளை மாற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் Magstripe மையமாகக் கொண்டு இயங்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வந்தால் உடனடியாக எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளவும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader