தஞ்சை மாணவி தற்கொலையில் பள்ளி மீது விசாரணை தேவையற்றது என எஸ்றா சற்குணம் கூறினாரா ?

பரவிய செய்தி
மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம். கிறிஸ்தவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை. பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது – பேராயர் எஸ்றா சற்குணம்.
மதிப்பீடு
விளக்கம்
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மீது விசாரணை செய்யக்கூடாது என பேராயர் எஸ்றா சற்குணம் கருத்துக் கூறியதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ஜனவரி 22-ம் தேதி எஸ்றா.சற்குணம் பற்றிய நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. அதேபோல், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் கருத்துத் தெரிவித்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
ஆகையால், புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
முடிவு :
நம் தேடலில், மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டது அவரின் தனிப்பட்ட விருப்பம். கிறிஸ்தவத்தை பின்பற்ற அழைப்பது எங்கள் உரிமை. பிடிக்காவிட்டால் வேறு பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும். தூய இருதய மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.