ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள், பள்ளி கட்டணம் செலுத்த உதவுவதாக பரவும் பொய்யான தகவல் !

பரவிய செய்தி
பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும் 9460031554, 9001236414, 9549677770, 9314459474, 9828926151, 9328620003, 9826267649, 9888989746, 9653150004, 8889712233, 9926311234, 8889995733, 8889995731, 9826813756, 9752033255, 9826858785, 7489587851, 9098321420, 9879537809, 9825700070, 9727215130, 9879200245, 8107371224, 9406824074. முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். அவசியம் படித்து மற்றவர்களுக்கு அனுப்பவும்…..”பிரார்த்தனை செய்யும் கரங்களை விட உதவும் கரங்கள் மேலானது.
மதிப்பீடு
விளக்கம்
ஏழ்மையில் உள்ள குழந்தைகளுக்கு பாட புத்தங்கள் மற்றும் பள்ளிக் கட்டணம் செலுத்த உதவி தேவை என்றால் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு 20-க்கும் மேற்பட்ட எஎண்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை பிரிண்ட் எடுத்து காண்பிக்கப்பட்ட புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பதிவுகளில் உள்ள 24 தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அந்த தொலைபேசி எண்கள் சுவிட்ஸ் ஆப் மற்றும் தொடர்பில் இல்லை என வந்தன.
இந்த தொலைபேசி எண்களை கொண்டு தேடிய போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இதே தகவலும், தொலைபேசி எண்களும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் என நாட்டின் பல பகுதிகளில், வெவ்வேறு மொழிகளில் பரவி இருக்கிறது.
மேலும் படிக்க : ஏழை மாணவர்களுக்கு உதவிக் கிடைப்பதாக பரவும் தவறான தகவல்!
இதற்கு முன்பாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைப்பதாக பலமுறை தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு உள்ளன. ஏழைக் குழந்தைகளுக்கு உதவி கிடைக்கும் என குறுஞ்செய்திகளை பகிர்வதில் தவறில்லை என்றாலும், இங்கு பகிரப்படும் இதுபோன்ற பெரும்பாலான தகவல்கள் உண்மைத்தன்மை அறியாமல், வருகிற ஃபார்வர்டு தகவலை அப்படியே பகிர்கின்றனர்.
முடிவு :
நம் தேடலில், ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளி புத்தகம் மற்றும் பள்ளிக் கட்டணம் செலுத்த உதவி கிடைப்பதாக வைரல் செய்யப்படும் தகவல் பொய்யானது என அறிய முடிகிறது.