தந்தி கிளப்பிய வதந்தி : பள்ளி ஆசிரியர்கள் செயலியில் வருகைப் பதியவில்லை என்றால் சம்பள பிடித்தம் !

பரவிய செய்தி

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் என தகவல்.

மதிப்பீடு

விளக்கம்

” கல்வித்துறை அதிரடி திட்டம். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்கள் வருகை பதிவு. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என கல்வித்துறை வட்டாரம் தகவல் ” என தந்தி டிவி சேனல் முக்கிய செய்தியாக வெளியிட்டது.

உண்மை என்ன ?

இதுகுறித்து தெரிந்து கொள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறையைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இணைய வழியாக ஆசிரியர்களின் வருகைப் பதிவை மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 1-ம் தேதி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் காலை 10 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என வெளியாகும் செய்தி பொய்யானது. அப்படி ஏதும் அறிவிக்கப்படவில்லை” எனத் தெரிவித்து இருந்தனர்.

அதேபோல், தமிழ்நாட்டின் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் தரப்பிலும் தந்தி டிவி வெளியிட்ட செய்தி பொய்யானது என ட்விட்டரில் TNDIPR பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் என தந்தி டிவி வெளியிட்ட செய்தி பொய்யானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader