பூஜை என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடப்பதாக வைரலாகும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

பரவிய செய்தி
இந்த காலத்துல கூட இப்படி ஏமாறுபவர்கள் இருக்க தான் செய்யுறாங்க..
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14, சட்டத்தின் முன் பெண்களுக்கு சமத்துவம் வழங்க வேண்டும் என்கிறது. அதே போன்று எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்பதை பிரிவு 15 (i) குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் “இதுதான் சனாதனம், இந்த காலத்தில் கூட இப்படி ஏமாறுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டு தனியாக வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணை வயதான சாமியார் ஒருவர் மெழுகுவர்த்தி ஏத்தி வைத்து பூஜை என்ற பெயரில் தவறாக நடந்து கொள்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Part – 2 pic.twitter.com/5AGeswCrcF
— Illuminati JR (@Nomadic_JR) June 21, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டவை அனைத்தும் உண்மையாக நடந்த சம்பவங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதன் முழு வீடியோ குறித்து தேடியதில், 3RD EYE எனும் யூடியூப் சேனல், பரவி வரும் வீடியோவை கடந்த 2022 பிப்ரவரி 07 அன்று வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படும் Disclaimer-இல் “இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும், நிஜ உலகில் சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதை பொதுமக்களுக்கு புரிய வைப்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட ரீல் (Reel Life video footage) வீடியோ மற்றும் இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
மேலும் படிக்க: இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ
மேலும் படிக்க: இந்து குழந்தையை புர்கா அணிந்த ஆண் கடத்துவதாகப் பரப்பப்படும் பொய் வீடியோ !
இதற்கு முன்பாகவும், இதேபோல் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தியாக பரப்பப்பட்டது. அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், பூஜை என்ற பெயரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரவும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.