குழந்தைகளின் கன்னத்தில் முத்திரை வைத்த சிறைக்காவலர்.

பரவிய செய்தி

ரக்ஸா பந்தன் அன்று போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் கன்னத்தில் அதிகாரிகள் சிறை முத்திரையை வைத்துள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

போபால் மத்திய சிறையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

விளக்கம்

 மத்தியப் பிரதேசம் போபால் சிறையில் உள்ள உறவினரை பார்க்க சிறுமியும் , அவளது தம்பியும் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர் . சிறைசாலையின் விதிமுறைகளின்படி கைதிகளை பார்க்க வருபவர்களின் கைகளில் சிறைச்சாலையின் முத்திரையை குத்துவது வழக்கம் . ஆனால் சிறை அதிகாரிகள் தவறுதலாக உறவினரை பார்க்க வந்த குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரையை குத்தியுள்ளனர் .

   குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் மனித உரிமை ஆணையம் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளது . ஆகஸ்ட் 7 ஆம் தேதி  திங்கள்கிழமையன்று ரக்ஸா பந்தன் என்பதால் கைதிகளை காண அதிகளவில் உறவினர்கள் வந்துள்ளனர் . கூட்ட நெரிசலில் கைகளுக்கு பதிலாக குழந்தைகளின் கன்னத்தில் முத்திரையை குத்தி உள்ளனர் .

 இச்சம்பவம் பற்றி போபால் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் டினேஷ் நர்கவ் கூறுகையில் , குழந்தைகளின் கன்னங்களில் முத்திரையானது தெரியாமால் குத்தப்பட்டு இருக்கலாம் . இதற்கான காரணம் ரக்ஸா பந்தன் அன்று கைதிகளை பார்க்க 8500 க்கும் அதிகமான பெண்கள் , குழந்தைகள் வந்துள்ளனர் .

கூட்ட நெரிசலில் தவறுதலாக குழந்தைகளின் கன்னத்தில் சிறை முத்திரையை குத்தி இருக்கலாம் . மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது . சிறை அதிகாரி வேண்டுமென்றே இவ்வாறு செய்திருந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

 இச்சம்பவம் குறித்து தெளிவான அறிக்கையை ஒரு வாரத்தில் அளிக்குமாறு சிறைத்துறைக்கு அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது . இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்டெலே தெரிவித்துள்ளார் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button