நார்வேயில் 9,30,000 வகையான பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் ” Seeds Vault “.

பரவிய செய்தி
நார்வே நாட்டின் Spitsbergen என்ற தீவில் உள்ள மலையில் உலகில் உள்ள 9,30,000 வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன . இதே போல் இந்தியாவிலும் இமயமலையில் உள்ள ” doomsday”-ல் 5,000 க்கும் மேற்பட்ட விதைகள் பாதுகாக்கப்படுகின்றன .
மதிப்பீடு
சுருக்கம்
சர்வதேச விதைகள் பாதுகாப்பு பெட்டகம் நார்வேயின் Spitsbergen தீவில் உள்ளது. இதேபோன்று இந்தியா இமயமலையின் உச்சியில் விதைகளின் பாதுகாப்பு பெட்டகத்தை நிறுவியுள்ளது.
விளக்கம்
வருங்காலத்தில் ஏற்படும் பேரிடர்களால் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டால் நாம் காலங்காலமாக பாதுகாத்து வந்த இயற்கை பாரம்பரிய விதைகள் மறைந்து போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகையால் பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.
ஆகையால், 2001 ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச விதைகள் பாதுகாப்பு பெட்டகத்தை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதன்படி, நார்வேயில் உள்ள தீவில் சர்வதேச விதைகள் பாதுகாப்பு பெட்டகம் CROP TRUST உதவி உடன் நார்வே அரசு அமைத்தது.
2008-ல் ஆர்டிக் வட்டத்தில் உள்ள நார்வே நாட்டை சேர்ந்த Spitsbergen என்ற தீவில் உள்ள மலையில் 430 அடி ஆழத்தில் விதைகள் பாதுகாக்கும் பெட்டகம் அமைக்கப்பட்டு, உலகில் உள்ள 9,30,000 வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது விதைகளை மிகப்பெரிய சேமிக்கும் கிடங்கு ஆகும். இதன் மதிப்பு 8.8 மில்லயன் USD. இந்த பெட்டகம் அமைக்கப்பட்ட பின்பு ஆண்டுதோறும் விதைகளின் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதேபோல் இந்தியாவிலும் விதைகளை பாதுகாக்க ஆரம்பித்து உள்ளனர்.
இந்தியா இமயமலையின் 17,000 உச்சியில் ஒரு விதைகள் பாதுகாப்பு பெட்டகத்தை உருவாக்கியுள்ளனர் . இங்கு 5000 க்கும் அதிகமான விதைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன . இந்த பகுதியில் பூஜ்ஜிய வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் இருப்பதால் எதிர்க்கால தலைமுறையினருக்கு உதவக்கூடிய விதைகள் சேமிக்கப்படுகின்றன .
விவசாயம் இன்றியமையாத ஒன்றாக உள்ளதால் நாட்டின் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பது கடமையாகும் . இந்தியா ஒரு மூலிகைத் தோட்டம் அகும் . இங்கு பலவகையான தாவரங்கள் ஒரு காலத்தில் காணப்பட்டன . ஆனால் நாகரிக வளர்ச்சியால் பலவற்றை இழந்துள்ளோம், எனவே அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நம்மிடம் மீதம் உள்ளவற்றையாவது பாதுகாப்பது அவசியம் .
நார்வேயில் உள்ள விதைகள் பாதுகாப்பு பெட்டகம் The nordic gene பேங்க் கீழ் இயங்குகிறது . இந்தியாவில் உள்ள விதைகள் பாதுகாப்பு பெட்டகம் Ministry of defense R&D கீழ் இயங்குவதாக கூறுகின்றனர் . விதை வெறும் ஒரு உணவு மற்றும் அழகு தாவரத்தை உருவாக்கும் பொருள் அல்ல , அது இயற்கை நமக்கு கொடுத்த வரம் .
13,000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட விவசாயத்தை பெருமைப்படுத்தவும், அவற்றை பாதுகாக்கவும் விதை மாதிரிகள் சர்வதேச விதைகள் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் நெல், உருளைக்கிழங்கு, கோதுமை, கடலை, பருப்பு உள்ளிடவையின் விதை மாதிரிகள் முக்கியமானவை. சர்வதேச விதைகள் பாதுகாப்பு பெட்டகம் நிறுவி 10 ஆண்டுகளை கடந்ததால் அங்கு சேமிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை( 10 லட்சம்) தாண்டியுள்ளது.