சீமான் ஆமை வடிவிலான கேக்கை வெட்டுவதாகப் பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர் . அதுல பாருங்க அந்த கேக் தான் ஹைலைட்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ் கலாச்சாரப்படி கேக் வெட்டிக் கொண்டாடிய தமிழர் என சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஆமை வடிவிலான கேக் ஒன்றை வெட்டிக் கொண்டாடும் புகைப்படம் ஒன்றை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
#தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர் .
அதுல பாருங்க அந்த கேக் தான் ஹைலைட் 😂😂😂😂 pic.twitter.com/QFT9eTx0Th
— Kavitha Suresh (@suravitha) November 8, 2023
தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர் .
அதுல பாருங்க அந்த கேக் தான் ஹைலைட் 😂 pic.twitter.com/DPxVj5mYrW
— 🇮🇳 Vellakuttai Gowtham BJP 🚩 (@gowthamcscvle) November 8, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், நாம் தமிழர் கட்சியின் இணையதளத்தில் ” Tamil-Leader-Prabhakaran-Birthday-65-Celebration-Naam-Tamilar-Katchi-Seeman-Chennai-Porur-21 ” எனும் தலைப்பில் இப்புகைப்படம் பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
அதில், ஆமை வடிவிலான கேக் இடம்பெறவில்லை. மாறாக, ” தலைவர் 65 “ என எழுதப்பட்ட கேக்கையே அவர் வெட்டுகிறார். 2019ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
மேலும், Pinterest எனும் இணையப்பக்கத்தில் ஆமை வடிவிலான கேக்கின் புகைப்படம் பதிவாகி இருக்கிறது. அந்த படத்தை சீமானின் புகைப்படத்தில் வைத்து எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : ராகுல் காந்தி பூணூலைக் காட்டி கவுல் பிராமணன் எனக் கூறியதாக சீமான் சொன்ன பொய் !
மேலும் படிக்க : “நான் மலையாளி” என சீமான் மேடையில் பேசியதாகப் பரப்பப்படும் எடிட் செய்த வீடியோ !
இதற்கு முன்பாக, சீமான் பேசிய பொய்கள் குறித்தும், அவருக்கு எதிராக பரவிய பொய்கள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், சீமான் ஆமை வடிவிலான கேக்கை வெட்டிக் கொண்டாடுவதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அப்புகைப்படம் 2019ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஆமை வடிவ கேக்கை வைத்து எடிட் செய்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.