எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என சீமான் கூறியதாக பரவும் விஷம வதந்தி !

பரவிய செய்தி
பொருளற்ற விவாதத்தைத் தொடர விருப்பமில்லை. எச்.ராஜாவும் எனக்குத் தந்தை போன்றவர் தான் பெற்றவரின் கோபத்தை பிள்ளைகள் கடந்து செல்வோம் – சீமான்
மதிப்பீடு
விளக்கம்
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில், யார் அந்த சீமான். சீமானோட அம்மா முதல்ல தமிழச்சியா ? சொல்லுங்க சார், அன்னம்மா தமிழா ? இல்லை. அவர் ஒரு மலையாளி. அட என்னை பிகாரிங்கிறான் ஒரு முட்டாள். அதனால், ஊடகங்களில் இனி ” தமிழ் இந்து ” என்றெல்லாம் பேசாதீர்கள் ” எனப் பேசி இருந்தார்.
அவரின் பேச்சு அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரின் பேச்சுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களும் எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பொருளற்ற விவாதத்தைத் தொடர விருப்பமில்லை. எச்.ராஜாவும் எனக்குத் தந்தை போன்றவர் தான் பெற்றவரின் கோபத்தை பிள்ளைகள் கடந்து செல்வோம் என சீமான் கூறியதாக தந்திடிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
செப்டம்பர் 29ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எச்.ராஜாவின் பேச்சிற்கு கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்ததாகவே வீடியோக்கள், செய்திகள் கிடைத்தன.
வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், அப்படியான எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. அந்த நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், சில மாதங்களுக்கு முன்பாக தேர்தல் தருணத்தில் விசிக வன்னிஅரசு பற்றி பரவிய போலிச் செய்தியின் கார்டுகளும் கிடைத்தன.
தந்தி டிவியில் செப்டம்பர் 29-ம் தேதி வெளியான மற்றொரு செய்தியில் சீமான் புகைப்படத்தை வைத்து தவறான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், எச்.ராஜா எனக்குத் தந்தை போன்றவர் என சீமான் கூறியதாக வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது. எச்.ராஜாவிற்கு பேச்சிற்கும் சீமான் பதிலடி கொடுத்து இருக்கிறார். செப்டம்பர் 29-ம் தேதி வெளியான தந்தி டிவி வெளியிட்ட மற்றொரு நியூஸ் கார்டில் சீமான் பற்றிய செய்தியை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.