பிரபாகரன் தன் காலில் விழுந்ததாக சீமான் கூறினாரா ?

பரவிய செய்தி
பிரபாகரன் என் காலில் விழுந்தார் – சீமான். பிரபாகரனை எலியை விட சிறுமை படுத்திய பெருமை இவரையே சாரும் !
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தன் காலில் விழுந்தார் எனக் கூறியதாக ஓர் வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது. அரசியல் நையாண்டி, Reel anthu pochu உள்ளிட்ட முகநூல் பக்கங்களில் வெளியான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.
36 நொடிகள் கொண்ட வீடியோவில், ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறையில் இருந்து சேரன், அமீர், பாலா என எல்லார் குறித்தும் பேசி இருக்கோம். தங்கர்பச்சான், தம்பி கெளதமன் எல்லார் குறித்தும்.. அதில அண்ணன் சத்யராஜ்.. இப்படி பேசிட்டே இருக்கும் போது தமிழ் திரைப்பட உலகம்.. நமக்குன்னு ஒரு அடையாளம் என்ன மிச்சம் இருக்கு.. ஆ நடிகர் திலகம் இருக்காங்க, இப்ப விட்டா நம்ம வடிவேலு.. வேற யாரு நமக்கு அடையாளமா தெரிலைங்க அப்படினு சொல்லும் போது.. அத வந்து நா அவர்கிட்ட சொன்னேன்.. தெய்வமே அப்படினு.. என் கால்ல இல்ல அங்க விழ முடியலல ” எனக் கூறி இருக்கிறார்.
உண்மை என்ன ?
வீடியோவின் மேலே விகடன் டிவி என இருக்கும் லோகோ உள்ளது. சீமான் விகடனுக்கு அளித்த பேட்டி குறித்து தேடிய பொழுது 2020 மே 18-ம் தேதி ” Tasmac திறந்ததால் எல்லா இடங்களிலும் கொலை கொள்ளை! ” என்ற தலைப்பில் வெளியான வீடியோ கிடைத்தது.
வீடியோவில் 8.50 நிமிடத்தில் பேட்டி எடுப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் வருவது தொடர்பாக நீங்கள் ஏதும் முயற்சிகள் எடுத்து உள்ளீர்களா என சீமானிடம் கேட்ட பொழுது, அவர் உருவாக்கப்பட்ட கலைஞன் அல்ல. பிறவிலேயே திறன் இருக்குனு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனால் இவரை பொறுத்த வரைக்கும் அதை நம்பிதான் ஆகணும். அசாத்திய கலைஞன். ஈழத்தில் நானும் எங்கள் தலைவரும் பேசிட்டு இருக்கும் போது எல்லாம் குறித்து பேசுவோம். அரசியல மாக, இக நிலைப்பாடு குறித்தும் கூட பேசுவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சின்ன சின்ன இயக்கங்கள், அதே மாதிரி திரைத்துறை இருந்து சேரன், அமீர், பாலா என எல்லார் குறித்தும் பேசி இருக்கோம். தங்கர்பச்சான், தம்பி கெளதமன் எல்லார் குறித்தும்.. அதில அண்ணன் சத்யராஜ் என எல்லாத்தையும் பேசுவோம். இப்படி பேசிட்டே இருக்கும் போது அவரு (பிரபாகரன்) தமிழ் திரைப்பட உலகம்.. நமக்குன்னு ஒரு அடையாளம் என்ன மிச்சம் இருக்கு.. ஆ நடிகர் திலகம் இருக்காங்க, இப்ப இதை விட்ட நம்ம வடிவேலு.. வேற யாரு நமக்கு அடையாளமா தெரிலைங்க அப்படினு சொல்லும் போது.. அத வந்து நா அவர்கிட்ட(வடிவேலு) சொன்னேன்.. தெய்வமே அப்படினு.. ஹே என் கால்ல இல்ல.. அங்க விழ முடியலல ” எனப் பேசியுள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தனது காலில் விழுந்தார் என சீமான் கூறியதாக பரவும் வீடியோ தவறாக பரப்பப்படும் ஒன்று என தெரிந்து கொள்ள முடிகிறது. தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.