சீமான் தன் மகனுக்கு திருப்பதியில் துலாபாரம் கொடுத்த புகைப்படமா ?

பரவிய செய்தி
முப்பாட்டன்.. முப்பாட்டன்னு தம்பிக கிட்ட சொல்லிட்டு சைஸா அண்ணன் மட்டும் திருப்பதியில போய் தன் மகனுக்கு துலாபாரம் கொடுத்தாரு பாருங்க.. ஏமிரா இதி
மதிப்பீடு
விளக்கம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் மற்றும் மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று துலாபாரம் கொடுத்ததாக இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.
ஆரிய வழியில் அதிபர் ஶ்ரீரங்கத்திலிருந்து🐢🐢🐢🐢 pic.twitter.com/P922MnB2Mp
— Saira Princes (@Saira_Twitzz) January 11, 2021
திருப்பதி எனக் கூறி ஒருபுறம் பரவினாலும், மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து பதிவிடுமாறு யூடர்னை டக் செய்தும் கமெண்ட் செய்து இருந்தனர்.
உண்மை என்ன ?
ஸ்ரீரங்கம் கோவிலில் சீமான் துலாபாரம் கொடுத்ததாக பகிரப்பட்ட புகைப்படங்களில் ஒன்றில் ” துலாபாரம் ” என தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிந்தது. இதை வைத்தே ஸ்ரீரங்கம் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
கமெண்ட்களில் சிலர் ஸ்ரீரங்கம் கோவில், திருப்போரூர் முருகன் கோவில் என பதிவிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் குறித்து தேடிய போது கீழ்காணும் வீடியோ கிடைத்தது.
இந்த வீடியோவில் 3.40வது நிமிடத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் தராசு, பெயர் பலகை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் திருப்போரூர் முருகன் கோவிலில் தன் மகனுக்கு துலாபாரம் கொடுத்த போது சீமான் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஸ்ரீரங்கம், திருப்பதி என தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசித்தாரா சீமான் ?
இதற்கு முன்பாக கூட, சீமான் தன் குடும்பத்துடன் அத்திவரதர் கோவிலுக்கு சென்றதாக தவறானப் புகைப்படத்தை வைரலானது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், சீமான் தன் மகனுக்கு துலாபாரம் கொடுக்கும் புகைப்படம் திருப்பதியில் அல்லது ஸ்ரீரங்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல, திருப்போரூர் முருகன் கோவிலில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.