இனி சான்றிதழ் நகல்களில் SELF ATTESTATION போதுமானதா?

பரவிய செய்தி
மதிப்பீடு
சுருக்கம்
23.09.2014 தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம்(attestation) அரசு அதிகாரிகளிடம் வாங்குவது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரம் விரயம் என்பதால் அரசு சார்ந்த வேலைகளுக்கு சுய சான்றொப்பம்(self-attestation) மட்டும் போதுமானது என அறிவித்துள்ளனர்.
விளக்கம்
சநேர்முகத்தேர்வு உள்ளிட்ட பலவற்றிக்கு மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள், புகைப்படம் உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் போது அதன் நகல் உடன் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்(attestation) வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு இனி அவசியமில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளதாக மீம் வடிவில் அரசாணை புகைப்படம் இடம்பெற்ற பதிவுகள் வெளியிட்டு உள்ளனர். அதில், எந்த சான்றிதழ்களுக்கும் வாங்க சான்றொப்பம்(attestation) வாங்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக அரசாணை
23.09.2014 தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், G.O (Ms) no.71 & G.O (Ms) no.189 personnel and administrative department-ன் படி குரூப் A & B அரசு அதிகாரிகள் சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் இடுகின்றனர். இந்த நடைமுறை மக்களுக்கு எளிதாக இல்லை மற்றும் கடினமான காரியத்திற்கு வித்திடுகிறது.
அரசு அதிகாரிகளிடம் சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம்(attestation) வாங்குவது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேரம் விரயம் என்பதால் நடைமுறை வழக்கம் புதுப்பிக்கப்படுகிறது.
” நேர்முகத்தேர்வின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யவே நகல்களில் சான்றொப்பம் தேவைப்படுகிறது. இறுதி சான்றிதழ் சரிப்பார்ப்பில் அசல் சான்றிதழ்களே சமர்பிப்பதால் நகல்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்(attestation) வாங்கி எப்பயனுமில்லை ”
இதைத் தொடர்ந்து, இதற்காக அனைத்து அரசு அலுவலங்களில் இருக்கும் சான்றொப்பம்(attestation) நடைமுறையில் இருந்து விடுபட அரசு உத்தரவிட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அல்லது இறுதியாக பணி நியமனத்தின் போது கலந்து கொள்பவரின் சுய சான்றொப்பம்(self-attestation) மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்ந்த பணிகளுக்கு சுய சான்றொப்பம்(self-attestation) மட்டும் போதுமானது என அரசு அறிவித்தது. ஆனால், இதர காரியங்களுக்கு அரசு பணியில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் சான்றொப்பம்(Attestation) வாங்குவது இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.
” இதற்கு முன்பாக Government of india மூலம் சுய சான்றொப்பத்தை(self-attestation) ஊக்குவிக்க ஜூலை 2014-ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.