60 வயதைக் கடந்தவர்களுக்கு ஆந்திரப் பேருந்துகளில் 25% சலுகை !

பரவிய செய்தி

ஆந்திரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் திருப்பதி செல்வோர் கவனத்திற்கு !

மதிப்பீடு

சுருக்கம்

ஆந்திராவின் APSRTC பேருந்துகளில் பயணிக்கும் 60 வயதான மூத்த குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் இருந்து 25 % சலுகை அளிக்கப்படும் என 2016-ல் அறிவித்துள்ளனர். இதேபோன்று கர்நாடகா மற்றும் தமிழகத்தில் என்ன என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதையும் படிக்கவும்.

விளக்கம்

ஜூலை 1, 2016 முதல் ஆந்திர மாநிலத்தின் APSRTC பேருந்துகளில் பயணிக்கும் 60 வயது மற்றும் அதனைக் கடந்த மூத்தக் குடிமக்களுக்கு பேருந்து கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் சலுகை அளிக்கப்படுவது அமுலுக்கு வரும் என APSRTC நிர்வாக இயக்குனர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.

Advertisement

இதில், பேருந்து கட்டணத்தில் சலுகை பெற அடையாள அட்டையாக அசல் ஆதார் அட்டையை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் . மேலும், மூத்தக் குடிமக்களுக்கான இந்த சலுகை குளிர்சாதன வசதிக் கொண்ட பேருந்து உள்ளிட்ட எந்தவொரு APSRTC பேருந்துகளிலும் பொருந்தும் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் APSRTC பேருந்துகளில் செல்ல சேர்ந்தால் அவசியம் அசல் ஆதார் அட்டையை உடன் எடுத்து சென்று இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

கர்நாடகா : 

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான மூத்தக் குடிமக்கள் அம்மாநிலத்தில் இயங்கும் KSRTC பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டணத்தில் 25 சதவீத சலுகையைப் பெறலாம் என 2017 பிப்ரவரியில் வெளியாகியுள்ளது.

Advertisement

இச்சலுகையைப் பெற அவர்கள் பட்டியலிட்ட அடையாள அட்டைகளில் ஒன்றை அவசியம் வைத்து இருக்க வேண்டும்.

தமிழ்நாடு :

2016 பிப்ரவரி 24-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் சென்னை பெருநகரத்தில் இயங்கும் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.

இன்றும் சென்னை பெருநகரங்களில் 60 வயதைக் கடந்தவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.96 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் பயனடைவதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் 60 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள், உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், திருப்பதி செல்ல நினைக்கும் மூத்தக் குடிமக்கள் ஆந்திரப் பேருந்தின் சலுகையை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளவும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button