மூத்தக் குடிமக்களுக்கான இரயில் கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக வதந்தி !

பரவிய செய்தி

மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு 40 சதவீதம், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிப்பு.

மதிப்பீடு

விளக்கம்

ஜூலை 1-ந்தேதி முதல் மூத்தக் குடிமக்களுக்கான இரயில் பயண கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வருவதாக இந்தியன் இரயில்வே அறிவித்து உள்ளது என குமுதம் நியூஸ் கார்டு மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

உண்மை என்ன ? 

2020 மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து மூத்தக் குடிமக்களுக்கு இரயில் பயண கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை நிறுத்தப்பட்டது. இதனால் இரயில்வே துறைக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் வெளிவந்தது.

2022 மே 20-ம் தேதி மூத்தக் குடிமக்களுக்கு இரயில் பயண கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை மீண்டும் வர வாய்பில்லை என இரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார்.

Twitter link  

” ஜூலை 1-ம் தேதி முதல் மூத்தக் குடிமக்களுக்கு இரயில் கட்டணத்தில் சலுகையானது மீண்டும் அமலுக்கு வருவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் பொய்யானது. அதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் இரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை ” என PIB ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

ஜூலை 1 முதல் முதியோர்களுக்கு மீண்டும் இரயிலில் கட்டண சலுகை அமல் என பரவும் தகவலை அரசு மறுத்த செய்தியை குமுதம் வெளியிட்டு இருக்கிறது. ஆனால், பழைய வதந்தி செய்தியை இன்னும் நீக்காமலே உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு 40 சதவீதம், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிப்பு எனப் பரவும் தகவல் வதந்தி என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader