சிறுபான்மையின பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படுவதாகப் பரவும் பொய்!

பரவிய செய்தி

இஸ்லாமிய பெண்களுக்கு RS. 51,000/- Shadi shakuna yozana thittam, ஷாதி (திருமண) சகுனா யோஜன திட்டம்.

X link 

மதிப்பீடு

விளக்கம்

திருமணமாகாத பட்டதாரி முஸ்லீம் பெண்களுக்கு ’பிரதான் மந்திரி ஷாதி ஷகுன் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் திருமண ஊக்கத் தொகையாக ரூ.51,000 வழங்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைராலாகப் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

ஷாதி ஷகுன் யோஜனா என்ற திட்டம் குறித்து தேடிப் பார்த்ததில் அப்படி எந்த திட்டமும் நடைமுறையில் இல்லை என்பதை அறிய முடிந்தது. 

இது தொடர்பாக இணையத்தில் தேடியதில், 2017, ஆகஸ்ட் மாதம் குன்வர் பாரதேந்திரா (Kunwar Bharatendra) என்பவர் மக்களவையில் சிறுபான்மையின பெண்களின் திருமண உதவித்தொகை பற்றி கேள்வி எழுப்பி இருந்ததை காண முடிந்தது.

அதற்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகர் (Ministry of Minority Affairs) முக்தர் அப்பாஸ் நக்வி, சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகையின் பயனாளிகளுக்கு ஒரு முறை உதவித்தொகையாக ரூ.51,000 ஷாதி ஷகுன் எனும் திட்டம் வகுக்க உள்ளதாக பதிலளித்துள்ளார்.

மேலும், 2018 ஏப்ரல் மாதம் மக்களவையில் ஷாதி ஷகுன் திட்டத்தின் நோக்கம், அத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் வழங்கப்பட்ட தொகை போன்ற பல்வேறு கேள்விகளை ஆண்டோ ஆண்டனி (ANTO ANTONY) என்பவர் முன்வைத்துள்ளார்.

அதற்கு, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வி படிப்பை தொடர்வதை ஊக்குவிப்பது மற்றும் பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்குதான் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினர் அமைச்சகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான தரவுகள் இல்லை என்றும் பதில் அளித்துள்ளது.  

மேலும், மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் அதிகாராப்பூர்வ இணையதளத்தில் தேடியதில், இத்திட்டம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதை அறியமுடிந்தது.அதாவது, சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்த இருப்பதாகவே ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி எந்த உதவித் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பரவும் பதிவுகள் மற்றும் செய்திகளில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க எந்த லிங்க்-களும் இருக்காது. ஆனால் செய்திகள் மட்டும் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாவதைக் காணமுடிகிறது.

முடிவு:

நம் தேடலில், சிறுபான்மையின பட்டதாரி பெண்களுக்கு ஒன்றிய அரசு ரூ.51,000 உதவித் தொகை வழங்குவதாக பரவும் தகவல் உண்மை அல்ல

Please complete the required fields.
Back to top button
loader