விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பரவும் பழைய புகைப்படம் !

பரவிய செய்தி
விராட் கோலி-க்கு அடுத்து சாருக்கான் அவர் பங்குக்கு ஜீ யை வெச்சு செஞ்சுட்டார்.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் குறித்த பல்வேறு சர்ச்சைகள் உள்ளது. சமீபத்தில் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழைக் கேட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது. இதையடுத்து மோடி தனது உண்மையான சான்றிதழை (original certificate) வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) தனது டிகிரி சர்டிஃபிகேட்டுடன் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது.
"இப்படி ஒவ்வொருத்தரா டிகிரி சர்டிஃபிகேட்டுடன் பண்ண வரிசை கட்டி கிட்டு வந்தா நான் என்னடா செய்வேன்?" என நரேந்திரன்ஜி புலம்புவதாக தகவல்! 🤣 pic.twitter.com/ooz8XzdbAa
— SANKARRAMANI (@SankarRayan) April 4, 2023
இந்நிலையில் கடந்த மார்ச் 30ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் தனது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழைப் பதிவிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதில், “இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) தனது டிகிரி சர்டிஃபிகேட்டுடன் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. இப்படி ஒவ்வொருத்தரா டிகிரி சர்டிஃபிகேட்டுடன் பண்ண வரிசை கட்டி கிட்டு வந்தா நான் என்னடா செய்வேன்? என நரேந்திரன்ஜி புலம்புவதாக தகவல்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் ஷாருக்கானின் புகைப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடுகையில், அது ஷாருக்கான் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பட்டப்படிப்பு சான்றிதழைப் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனத் தெரியவந்தது.
இது குறித்து ‘The Quint’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘Fan’ என்னும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் பங்கெடுத்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் தான் படித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்குச் சென்றபோது, கல்லூரி முதல்வர் ஷாருக்கானின் இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழை வழங்கியுள்ளார்.
அப்போது ஷாருக்கான், தனக்கு இது மிகவும் சிறப்பான தருணம். 1988ல் நான் வெளியேறிய கல்லூரிக்கு மீண்டும் வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அவர் அக்கல்லூரியில் 1985 முதல் 1988 வரை பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் 28 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றது குறித்து ‘இந்தியா டைம்ஸ்’ போன்ற இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் 2016, பிப்ரவரி 16ம் தேதி பதிவு செய்துள்ளார்.
What a beautiful day thank you university mates & faculty. Love to all for such a memorable emotional moment. pic.twitter.com/bNaQQLJmCn
— Shah Rukh Khan (@iamsrk) February 16, 2016
2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது அவர் பதிவிட்டது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர். சமீபத்தில் ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழ் எதையும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடவில்லை.
மேலும் படிக்க : மோடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாகக் கன்னட பத்திரிகை செய்தி வெளியிட்டதா?
இதற்கு முன்னர் பிரதமர் மோடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டிருந்தது.
முடிவு :
நம் தேடலில், விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது சான்றிதழ் புகைப்படத்தை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல. ஷாருக்கான் தான் படித்த கல்லூரிக்கு 2016ம் ஆண்டு சென்றபோது, அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இது குறித்து எந்த பதிவையும் அவர் செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.