வைரலாகும் சீனாவின் ஷாங்காய் நண்பன் பாலத்தின் வீடியோ… உண்மை என்ன ?

பரவிய செய்தி
மில்லியன் யுவான் RMB மொத்த முதலீடான ஷாங்காய் நண்பன் பாலம் ஆசியாவிலேயே முதல் பாலமாகும்.
மதிப்பீடு
விளக்கம்
சீனா தன் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வரும் தகவல்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்ட நண்பன் பாலத்தின் கண்கவர் காட்சி என இவ்வீடியோ இந்திய அளவில் வைரலாகி வருகிறது. வெறும் 9 நொடிகள் கொண்ட வீடியோ கூட 1 மில்லியன் பார்வையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
சீனாவில் உள்ள நண்பன் பாலம் என ஆங்கிலத்தில் தேடுகையில் ஷாங்காய் பகுதியில் உள்ள Nanpu bridge என்கிற புகைப்படங்கள், வீடியோக்களுடன் கூடிய முடிவுகள் கிடைத்தன. 1991-ம் ஆண்டில் Nanpu bridge ஹுவாங்பூ நதியின் மீது கட்டப்பட்டது.
அதுமட்டுமின்றி, Nanpu bridge பாலத்தில் இருந்து வட்ட வடிவில் செல்லும் சாலை தொடர்பாக இணையத்தில் கிடைத்த வீடியோவில் இடம்பெற அமைப்பும், வைரல் செய்யப்படும் வீடியோவும் வேறாக இருப்பதை பார்க்கலாம்.
வைரல் செய்யப்படும் 9 நொடிகள் கொண்ட வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், ” பாலத்தில் அடுத்தடுத்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை பார்க்க முடியும். முதல் 6 சாலைகளில் செல்லும் வாகனங்களே இறுதியாக உள்ள பகுதி வரைக்கும் உள்ள சாலைகளில் செல்வதை பார்க்கலாம்.
வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஷாங்காய் பகுதியில் உள்ள Nanpu bridge-ஐ வைத்து டிக்டாக்விற்காக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் கிடைத்தன. அவையும், வைரல் செய்யப்படும் வீடியோ போன்றே இருப்பதை பார்க்க முடிந்தது.
முடிவு :
நம் தேடலில், சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள நண்பன் பாலத்தின் காட்சி என வைரல் செய்யப்படும் வீடியோ பாலத்தின் உண்மையான தோற்றத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.