ஹெலிகாப்டரை சுறா மீன் தாக்குவதாக திரைப்படத்தின் காட்சியை பதிவிட்ட கிரண் பேடி !

பரவிய செய்தி
இந்த அரிதான வீடியோவிற்காக நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பாஜக சார்பில் பதவி வகித்தவர் கிரண் பேடி. அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பாருங்கள் என பதிவிட்ட வீடியோவில், ” கடல் பகுதியில் வரும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று தாக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோவிற்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்டு உள்ளதாக வீடியோவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Watch this pic.twitter.com/Io0PQb567U
— Kiran Bedi (@thekiranbedi) May 11, 2022
உண்மை என்ன ?
கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2017-ல் வெளியான 5 Headed Shark Attack எனும் திரைப்படத்தின் 1 நிமிட ட்ரெய்லர் வீடியோவில் இறுதியாக அக்காட்சி இடம்பெற்று இருக்கிறது.
” 5-Headed Shark Attack ” எனும் தலைப்பில் வெளியான ட்ரெய்லரில் 5 தலைகள் கொண்ட சுறா மீன் ஹெலிகாப்டரை தாக்கும் காட்சியை நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் உடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி இருக்கிறார்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல் கிரண் பேடி பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் படிக்க : 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்த வீடியோவா?| கிரண் பேடி பதிவு.
மேலும் படிக்க : குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் கோழிக்குஞ்சுகளாக மாறினவா ?
பொய்யான, தவறான வீடியோக்களை கிரண் பேடி அவர்கள் பகிர்வது இது முதல் முறை அல்ல. குறிப்பாக, சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வந்ததாக பரவிய வதந்தி வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
— Kiran Bedi (@thekiranbedi) January 4, 2020
மேலும் படிக்க : சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம்: உண்மையா ?
முடிவு :
நம் தேடலில், நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்ட அரிதான வீடியோ என கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ 5 தலைகள் சுறாவின் தாக்குதல் எனும் திரைப்பட ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சி என அறிய முடிகிறது.