பெண்களுக்காக “She Team” வாட்ஸ் அப் எண் நாடு முழுவதிற்குமா ?

பரவிய செய்தி

உங்களின் மனைவி , மகள் , சகோதரி, தாய் , நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இந்த எண்ணை அனுப்பவும். அனைத்து ஆண்களும் உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு பகிருங்கள். அவசரநிலையில், இந்த எண்ணிற்கு பெண்கள் பிளாங்க் குறுஞ்செய்தி அல்லது மிஸ்டு கால் கொடுக்கலாம்.. உங்களின் இடத்தை போலீஸ் கண்டறிந்து உங்களுக்கு உதவுவார்கள். இது இந்தியா முழுவதற்கும்.

மதிப்பீடு

விளக்கம்

காவல் துறையில் “She Team” என்ற பெயரில் பெண்களுக்கு ஆபத்தான காலங்களில் உதவ வழங்கப்பட்டு உள்ள எண் என முகநூல் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரவும் செய்தி குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Advertisement

Facebook link | archived link

“She Team” என்ற பெயரில் வழங்கப்பட்டு உள்ள ” +91 94906 17444 ” எண்ணை கொண்டு தேடிய பொழுது தெலங்கானா மாநிலத்தின் சைபராபாத் காவல்துறை தரப்பில் 24*7 நேர சேவைக்கு வழங்கப்பட்ட வாட்ஸ் அப் எண் எனும் தகவல் கிடைத்தது.

இதேபோல், தெலங்கானா மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு பிரிவின்  ” http://womensafetywing.telangana.gov.in/ ” இணையதளத்தில் சைபராபாத் காவல்துறையின் வாட்ஸ் எண்  +91 94906 17444  வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால், இந்த வாட்ஸ் அப் எண் தெலங்கானா மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயன்பாட்டில் உள்ள எண் என்பதை அறிய முடிகிறது.

Advertisement

ஆனால், ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பிறகு அதிக அளவில் செய்திகள் வரத் தொடங்கியதால் 9490617444 என்ற எண்ணில் பயன்படுத்தி வந்த வாட்ஸ் அப் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 7901114100 என்ற எண்ணை தற்காலிகமாக பயன்படுத்தி வருவதாகவும், மக்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் விசி.சஜ்ஜனர் ட்வீட் செய்தியுள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archived link

எனினும், அதே எண் (9490617444) மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக சைபராபாத் காவல் துறை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

தெலங்கானா காவல்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தின் 28 இடங்களுக்கான காவல்துறையின் ஈமெயில் ஐடி மற்றும் வாட்ஸ் அப் எண்ணை வழங்கி உள்ளனர். இந்த சேவை தெலங்கானா மாநிலத்தில் மட்டுமே, இந்தியா முழுவதுமில்லை.

ஆகையால், அந்த எண்ணையும், ஃபார்வர்டு செய்தியையும் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். ஆபத்தான நிலையோ அல்லது அவசர நிலையோ இருந்தால் 100-ஐ தொடர்பு கொள்ளவும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button