This article is from Feb 14, 2019

ஷியா முஸ்லீம் என்பதால் தாயின் முன் கொல்லப்பட்ட 6 வயது சிறுவன்

பரவிய செய்தி

சவுதியில் ஷியா முஸ்லீம் என்பதால் தாயின் முன் கொல்லப்பட்ட 6 வயது சிறுவன்.

மதிப்பீடு

சுருக்கம்

சவுதி அரேபியாவின் மைதீனாவிற்கு தன் மகனுடன் வந்த தாயின் கண் முன்னே 6 வயது சிறுவனை கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் உலகளவில் கண்டனங்களை பெற்று வருகிறது.

சிறுவனின் மரணத்திற்கு நீதிக் கேட்டு #justiceforzakaria என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விளக்கம்

6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் பெற்று வருகிறது. எந்த பாவமும் செய்யாத அப்பாவி சிறுவனின் உயிர் பறிபோனதற்கு காரணம் மத அடிப்படை வாதமே தவிர வேறொன்றும் இல்லை.

ஊடகங்களின் தகவல்படி, “ சகாரியா-அல்-ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தன் தாயுடன் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் புனித தலமான மதீனாவிற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் நீங்கள் ஷியா முஸ்லீமா என டிரைவர் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவனின் தாய் ஆம் எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட உடன் நீ இஸ்லாத்தின் தவறான வேரில் இருந்து வந்தவன் எனக் கூறி கண்ணாடி பாட்டிலை உடைத்து சிறுவன் சகாரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டதை பார்த்த உடன் தாய் நிலைக் குலைந்து மயங்கி விழுந்துள்ளார்.

சிறுவன் சகாரியா கொல்லப்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் கோப அலையை உண்டாக்கியது. சிறுவனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என உலகளவில் சமூக வலைதளங்களில் #justiceforzakaria என பதிவிட்டு வருகின்றனர்.

சிறுவன் கொல்லப்பட்டதால் சவுதியில் கலவரம் உண்டாகும் வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும், இதனால் ஷியா முஸ்லீம் இன மக்களுக்கு சவுதி அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஷியா முஸ்லீம் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.

“ சவுதியில் ஷியா முஸ்லீம்கள் இராணுவத்தின் கடும் நடவடிக்கைக்கு கீழே இருப்பதாகவும், பல ஷியா முஸ்லீம்கள் சிறையில் இருப்பதாகவும் கூறுகின்றனர் “.

(#justiceforzakaria) இறந்த சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதே போராடும் மக்களின் விருப்பம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader