ShopClues நிறுவனத்தின் பரிசு கூப்பன் என வீடு தேடி வரும் மோசடி !

பரவிய செய்தி
Shopclues நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங்கில் வெற்றி பெற்றதால் கிடைக்கும் அதிர்ஷ்ட கூப்பன் என வீட்டிற்கு வரும் சான்றிதழ் மற்றும் கூப்பன் கோட்கள் !
மதிப்பீடு
விளக்கம்
ஆன்லைன் வணிக தளமான Shopclues நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பரிசு கூப்பன் உங்களுக்கு கிடைத்துள்ளதாக வரும் போன் அழைப்புகள், மெசேஜ், வீடு தேடி லெட்டர் மூலம் கூப்பன்கள் அனுப்பப்படுகிறது
தமிழ்நாட்டில் கூரீயரில் என் நண்பருக்கு பரிசு கூப்பனை அனுப்பப்பட்டதாக யூடர்ன் தளத்திற்கு கூப்பன்களின் இவ்விரு புகைப்படங்கள் அனுப்பி இருந்தனர். இதுபோன்ற அழைப்புகள், மெஜேஜ்கள் ஆகியவை மோசடி கும்பல்களால் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
Shopclues நிறுவனம் பரிசு கூப்பன் வழங்கும் எந்தவொரு கான்டெஸ்டையும் நடத்தவில்லை. ட்விட்டரில் Shopclues நிறுவனத்தின் பெயரில் வரும் லக்கி கூப்பன்கள் பற்றி அந்நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்ததோடு இதுபோன்ற மோசடிக்குள் சிக்க வேண்டாம் என கடந்த ஆண்டில் இருந்தே பதில் அளித்து வருகிறது.
Yes, hope u will take necessary action to save your other customers from this fraud, they are using Shoplclues name to do this. Fraud help line numbers available in attached image. pic.twitter.com/nMk1SkoG4T
— Devendra (@DevTheD) August 16, 2019
@ShopClues someone claiming to be ShopClues representative called me to say I have won a mahindra car as a gift since I purchased recently in ShopClues . Once i realized it is a spam call she quickly cut the call . Can you please take action on this number ? @tnpoliceoffl pic.twitter.com/Pfr9PPP57X
— Raghu (@maalolan) January 4, 2021
மேலும் படிக்க : Snapdeal நிறுவனம் பெயரில் கார் பரிசளிப்பதாக மோசடி| மெசேஜ்களை நம்பி பணத்தை இழக்காதீர்!
இதற்கு முன்பாக, Snapdeal ஆன்லைன் வணிக தளத்தில் உங்களுக்கு 12 லட்சம் மதிப்புள்ள மஹிந்திரா கார் பரிசாக விழுந்துள்ளதாக வரும் மோசடி அழைப்புகள், மெஜேஜ்கள் குறித்து நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
இதுபோன்ற மோசடி கும்பல்கள், உங்களின் தனிப்பட்ட வங்கி விவரங்கள் அல்லது முன்பணம் செலுத்த வேண்டும் என உங்களை பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள். பரிசு கூப்பன் என வரும் மோசடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள் !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.