சென்னையில் ட்ராபிக் சிக்னல் கோட்டை தாண்டினால் திரையில் முகத்துடன் அபராத தொகையும் வருவதாக தவறாகப் பரவும் VFX வீடியோ !

பரவிய செய்தி
சென்னையில் எச்சரிக்கையாக வாகனங்களை ஓட்டவும்!
மதிப்பீடு
விளக்கம்
சென்னை போக்குவரத்து காவல்துறை வாகனங்களின் வேகத்தை அளக்க முக்கிய இடங்களில் ஸ்பீடு ரேடார்களை அமைத்துள்ளது. அதன்படி பகல் நேரங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், இரவில் மணிக்கு 50 கி.மீ வேகத்திலும் வாகனம் வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு வாகனங்களின் வேகத்தை அளவிடும் அந்த கருவியின் மூலமே அபராதம் விதிக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகளும் வெளியாகின.
சென்னையில் புதியதாக தொடங்கியுள்ள ட்ராக் சிக்னல். நீங்கள் கோட்டை தாண்டி நின்றால்…
உங்கள் முகம் வண்டி நம்பர் மற்றும் அபராத தொகையுடன் தெரிவீர்… pic.twitter.com/uPgxmVhbzn— Senthilpandian K (@SenthilpandianK) June 30, 2023
இந்நிலையில், சென்னையிலுள்ள சாலைகளில் சிவப்பு விளக்கு எரியும் போது கோட்டினை தாண்டி நின்றால் உங்களது முகம், வண்டி எண் மற்றும் அபராத தொகை திரையில் தெரியும் வகையில் புதிய இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
*சென்னையில் புதியதாக தொடங்கியுள்ள ட்ராக் சிக்னல். நீங்கள் கோட்டை தாண்டி நின்றால் உங்கள் முகம் வண்டி நெம்பர் மற்றும் அபராத தொகையுடன் தெரிவீர்கள்….* pic.twitter.com/fCxmLTVW8x
— V.SURESH., (@vsureshcz) June 30, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடிந்தது. மேலும் நமது தேடலில் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் பரவி வருவதைக் காண முடிந்தது.
இந்த வீடியோவை ‘Rigged Indian’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2022ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் உள்ள ரெட் சிக்னல் டிராக்கர், இது வந்தால் நாம் சிறந்த போக்குவரத்து அமைப்பைப் பெறலாம். இது ஒரு VFX வீடியோ, உண்மையானது அல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில், ‘VFX artists/Animators’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. மேலும் அப்பக்கத்தில் வேறு சில VFX வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
தற்போது பரவக் கூடிய வீடியோவினை கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி மீண்டும் அதே பக்கத்தில் Pin செய்யப்பட்டுள்ளது. அதிலும் அந்த வீடியோ CGI (computer-generated imagery) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றே உள்ளது. இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் உள்ள தகவல் உண்மையானது அல்ல என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், சென்னை சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது கோட்டினை தாண்டி நின்றால் திரையில் புகைப்படத்துடன் அபராத தொகை காண்பிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது VFX மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.