This article is from Jul 28, 2018

எச்சரிக்கை: புதிதாக ட்ரென்ட் ஆகி வரும் ” SIM SWAP ” மோசடி!

பரவிய செய்தி

அனைவரும் கவனமாக இந்த செய்தியை படிக்கவும். ஒரு வாடிக்கையாளர் ஏமாற்றப்பட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. “ SIM SWAP “ என்ற புதிய மோசடி தொங்கியுள்ளது. உங்கள் செல்போனின் நெட்வொர்க் ஜீரோவிற்கு குறைந்த சிறிது நேரத்தில் உங்களுக்கு ஒரு அழைப்பு வரும். அதில் பேசும் நபர் நீங்கள் உபயோகிக்கும் நெட்வொர்க் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறுவார். மேலும், உங்களின் நெட்வொர்க்கில் பிரச்சனை இருப்பதாகவும், எண் 1-ஐ அழுத்தினால் உங்கள் நெட்வொர்க் பிரச்சனை சரியாகி விடுவதாக தெரிவிப்பார். ஒருவேளை அதை நம்பி நீங்கள் எண் 1-ஐ அழுத்தினால் உங்கள் செல்போன் நெட்வொர்க் மீண்டும் ஜீரோவாகவே இருக்கும், உங்கள் செல்போன் ஹக் செய்யப்பட்டது. “ SIM SWAP “ எனும் இந்த மோசடி நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சில நொடிகளில் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும், உங்கள் செல்போன் ஹக் செய்யப்பட்டதும், பணம் எடுக்கப்பட்டது பற்றியும் எந்த தகவலும் வங்கியில் பெற முடியாது. ஆகையால், எச்சரிக்கையாக இருக்கவும்.

மதிப்பீடு

சுருக்கம்

1-ஐ அழுத்தினால் மட்டும் திருட முடியாது இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. “ SIM SWAP “ மோசடி குறித்து இந்த தகவலை வெளியிட்டது ஹைதராபாத் க்ரைம் போலீஸ். பல மாநிலங்களில் தகவல் திருட்டு, அந்த நபருக்கே தெரியாமல் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

விளக்கம்

மே 2018-ல் ஹைதராபாத் காவல்துறைக்கு வந்த புகாரில், “ நெட்வொர்க் சர்விஸ் ப்ரோவைடர் என்ற பெயரில் வந்த அழைப்பில் அவர்கள் கூறுவது படி செய்து இறுதியாக எண் 1-ஐ அழுத்தினால் நெட்வொர்க் நன்றாக இருப்பதாக கூறியதால் நானும் அந்த எண்ணை அழுத்தினேன். ஆனால், சில நொடிகளில் என் வங்கி கணக்கு மற்றும் pin நம்பர் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் ஹக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளன. வங்கி கணக்கில் இருந்த முழு தொகையும் எடுக்கப்பட்டது “ என்று தெரிவித்து இருந்தார்.

“ SIM SWAP “ என்ற மோசடியில் அந்த நபர் சொல்லும்படி செய்தால் செல்போனில் உள்ள முக்கிய தகவல்கள் அனைத்தும் சில நொடிகளில் அவர்களின் வசமாகிவிடும். நெட்வொர்க் சம்பந்தமாக வரும் அழைப்புகள் என்பதால் மக்கள் உடனடியாக அவர்கள் கூறுவதை செய்வதால், செல்போன்கள் ஹக் செய்யப்படுவது அவர்களால் அறிய முடியவில்லை.

“ SIM SWAP “

சிம் நெட்வொர்க் பிரச்சனை அல்லது நெட்வொர்க் மாற்றம் என வரும் மோசடிக் கும்பல்கள் உங்கள் செல்போனிற்கு வரும் Unique registration number, one time password , வங்கி கணக்கு சம்பந்தமான எச்சரிக்கை குறுந்தகவல்களை திருட இயலும். மக்களின் வங்கி கணக்கின் விவரங்களை phishing அல்லது ட்ரோஜன்/ மால்வர் பயன்படுத்தி திருடி விடுகின்றனர். பிறகு உங்கள் மொபைல் சேவை மையத்தை தொடர்பு கொண்டு மொபைல் தொலைந்ததால் புது சிம் வேணும் என நம்பத்தகுந்த வாடிக்கையாளர் போல பேசுவர் . பழைய சிம்மை செயல் இழக்க செய்துவிட்டு புதிய சிம்மை மோசடிக்காரர் பெற்றுவிடுவர் . சிம்மில் நெட்வொர்க் சுத்தமாக இல்லாததால் OTP மற்றும் பண பரிமாற்றம் பற்றிய எந்த தகவலையும் பெற முடியாமல் போய் விடும். வங்கியில் உள்ள பணத்தை முழுவதும் எடுத்து விடுவர்.

இந்த சிம் ஸ்வாப் மோசடியில் மூன்று கட்டங்களாக திட்டம் தீட்டி செயல்படுத்தப்படுகிறது.

  1.  முதல் கட்டம்: ஏமாற்ற நினைக்கும் இலக்கான நபரை தேர்வு செய்து அவரின் செல்போன் விவரங்களை அந்நிறுவனம் மூலம் எடுத்து விடுகின்றனர்.
  2. இரண்டாம் கட்டம்: அந்த நபரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட Identity  proof உள்ளிட்டவையை சேகரிக்கிறார்கள்.
  3. மூன்றாம் கட்டம்: இறுதியாக மோசடிக் கும்பல் தங்களை திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அந்த நபருக்கு பல்வேறு வங்கி பணப்பரிமாற்றம் நடந்ததாக போலியான தகவல்களை அனுப்பி, தன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டது என்று நினைக்க வைக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மொபைல் நிறுவனத்தின் பெயரில் பேசி அவரின் PIN நம்பர் மற்றும் ATM கார்டின் பின்னால் இருக்கும் CVV நம்பர் உள்ளிட்டவையை ஏமாற்றி பெற்றுக் கொள்கின்றனர்.

2017 ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 31,674 வழக்குகள் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் பெயரில் மோசடி :

கொல்கத்தாவில் Network Upgrade என நெட்வொர்க் சர்விஸ் ப்ரோவைடர் என்ற பெயரில் பேசி ஒரு பெண்ணின் 20 digit செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை பெற்று உள்ளனர். ஆனால், ஏற்கனவே அப்பெண்ணின் வங்கி தகவல்கள் திருடப்பட்டது அவருக்கு தெரியவில்லை. 72 மணி நேரத்தில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த 75,000 ரூபாய் திருடப்பட்டது.

“ SIM SWAP “ கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்து வந்தாலும், 2013-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மூத்த குடிமக்களை மட்டும் இலக்காக வைத்து இந்த மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நெட்வொர்க் மோசடி :

மற்றொரு மோசடி, “ அசோக் ரெட்டி என்பவருக்கு airtel நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களின் சிம்-ஐ 4G க்கு மாற்ற தான் கூறுவதை செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், அசோக் பயன்படுத்தி வந்தது Vodafone 3G நெட்வொர்க் என்பதால் மோசடி அழைப்பு என்பதை கண்டுபிடித்து போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்”.

பாதுகாப்பது எப்படி ?

  • விழிப்புடன் இருக்க வேண்டும் , உங்கள் செல்போன் நெட்வொர்க் இணைப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ள வேண்டும் . நீண்ட நேரம் எந்த அழைப்புகளையும் அல்லது SMS அறிவிப்புகளையும் பெற முடியவில்லை  என்றால் , ஏதோ தவறு நடந்துகொண்டிருக்கலாம் , இந்த மோசடியால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் ஆபரேட்டருடன் தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்.
  • சில மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு  SIM SWAP-இற்கு  எச்சரிக்கை  எஸ்எம்எஸ் அனுப்புகிறார்கள் – அப்போது உங்கள் மொபைல் ஆபரேட்டரை உடனடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் இந்த மோசடியை செயல்படும் போதே நிறுத்தலாம் .
  • ஏராளமான எரிச்சலூட்டும் அழைப்புகளைப் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் செல்பேசியை அணைக்க வேண்டாம், மாறாக அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் இருக்கலாம். உங்கள் இணைப்பில் பிரச்சினை  உள்ளதா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் .
  • எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம்  எச்சரிக்கைகள்  (ALERT ) வருவதற்கு பதிவுசெய்யுங்கள் இதனால்  உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால்  நீங்கள் உங்கள் கவனத்திற்கு வரும்.
  • ஏதேனும் சிக்கல்கள் அல்லது முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க  எப்போதும் உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகளை அடிக்கடி  சரிபார்க்கவும்.

கிரெடிட்கார்டு நம்பர், ATM pin நம்பர் மட்டுமே கேட்டு மோசடி நடைபெறுவதாக நினைத்து வந்தோம். ஆனால், உங்களின் செல்போன் எண், ஆதார் எண் என அனைத்து தகவல்களின் மூலம் மோசடி நடைபெறுகிறது என்பதை அறிந்து உங்கள் தகவல்களை யாருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் இருங்கள். இந்த தகவலை உடனடியாக அனைவருக்கும் தெரிவிக்கவும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader