சிங்கப்பூர் வெள்ள பாதிப்பு என பரவும் புகைப்படங்கள் உண்மையா ?

பரவிய செய்தி

என்னங்கடா சிங்கப்பூர்ல மழை பெஞ்சா தண்ணி அப்படி போயிரும் இப்படி போயிடும்னு கலர் கலரா ரீல் விட்டீங்க அதெல்லாம் சும்மா டுமீலா.

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

பெரிய நகரில் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் காட்சியை கொண்ட இரு புகைப்படங்கள் சிங்கப்பூரில் ஏற்பட்டதாகக் கூறி முகநூலில் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது. சிங்கப்பூரில் மழை பெய்தால் சாலையில் தண்ணீர் நிக்காது என இத்தனை நாள் ரீல் விட்டு வந்ததாகக் கூறி இப்புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

உண்மை என்ன ?

சிங்கப்பூரில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது தொடர்பாக தேடிய பொழுது, ஜூன் 23-ம் தேதி காலை 6.30 மணிக்கு சிங்கப்பூரின் சில பகுதியில் பலத்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு முட்டிகால் அளவிற்கு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படங்கள் செய்தியில் வெளியாகி இருக்கிறது. கனமழை பெய்தால் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. அதை விரைவாக சரி செய்யும் நடவடிக்கையே முதன்மையானது.

singapore flood

” வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உடனடி செயல்பாட்டுக் குழு பணியமர்த்தப்பட்டனர். காலை 9.20 மணிக்குள்ளாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வடிந்தது என பொது பயனீட்டு கழகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாக ” தமிழ் முரசு  இணையதளத்தில் ஜூன் 23-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

தற்போது சமூக வலைதளத்தில் சிங்கப்பூர் என பகிரப்பட்டு வரும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்த்தோம். முதல் படத்தை சேர்ச் செய்து பார்க்கையில், Melody எனும் முகநூல் பக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பாலத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் உள்ள வார்த்தைகளை மொழி மாற்றம் செய்த போது ” Klang Valley ” என்ற பெயர் கிடைத்தது. Klang Valley மலேசியாவில் அமைந்துள்ளது.

Advertisement

Facebook link | archive link 

இரண்டாவதாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், zhuanlan.zhihu எனும் சீன மொழி இணையதளத்தில் மே 22-ம் தேதி சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள குவாங்செள நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

மே 23-ம் தேதி News PS – daily videos எனும் ஊடகம் குவாங்செள வெள்ளம் பாதித்த பகுதிகளை வீடியோவாக வெளியிட்டது. அதில், 1.35 வது நிமிடத்தில் வைரலாகும் புகைப்படத்தின் காட்சி இடம்பெற்று உள்ளது.

முடிவு : 

நமது தேடலில் இருந்து, சிங்கப்பூரில் கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தின் காட்சி என சீனாவின் குவாங்செள மற்றும் 2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வெள்ளத்தின் புகைப்படங்களை தவறாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும், சிங்கப்பூரில் வெள்ளத்தால் தேங்கிய நீரை உடனடியாக அப்புறப்படுத்தியதாக செய்தியும் கிடைத்துள்ளன.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button