முதுகலைப்பட்டம் படிக்கும் பெண்களுக்கு ரூ.36,200 உதவி.!

பரவிய செய்தி
குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37,200-ஐ கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் தேர்தெடுக்கப்படும் 3000 முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு இரு ஆண்டிற்கு 36,200 ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்குகிறது.
விளக்கம்
குடும்பத்தில் ஒரே பெண்ணாக பிறந்து இளங்கலைப் பட்டம் பெற்றப் பிறகு முதுகலைப் பட்டம்(PG) படிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித் தொகையாக ரூ.37,200 வழங்குவதாக அதிகம் வைரலாகி வருகிறது.
ஆம், உண்மைதான். University Grant Commission scheme மூலம் வீட்டில் ஒரே பெண்ணாக இருந்து முதலாம் ஆண்டு முதுகலைப்பட்டம் படிக்கும் பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ. 36,200 என இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இது Indira gandhi post graduate scholarship எனத் தொடங்கப்பட்டது.
உதவித் தொகை பெற தகுதிகள் :
- குடும்பத்தில் ஒரே பெண்ணாக இருந்து பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு முதுகலைப்பட்டம் படிக்க வேண்டும்.
- மத்திய, மாநில அரசு உதவித் தொகை பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் UGC திட்டத்திற்கு தகுதியானவை.
- படிக்கும் பெண்ணிற்கு உடன் பிறந்த சகோதரிகள் அல்லது சகோதரர்கள் இருக்கக் கூடாது. இரட்டையார்களாக இருக்கும் பெண்கள் கூட இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
- முழு நேரப் படிப்பில் முதுகலைப் பட்டம் படிக்கும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பொருந்தும்.
- 3000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு UGC திட்டத்தில் பயன் பெறுவர்.
- 36,200 ரூபாய் என இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் : 30-11-2018. சில நாட்களே இருப்பதால் முடிந்த வரையில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
குறிப்பு :
திருச்சிராப்பள்ளி பெயரைக் கொண்டு பகிரப்படும் அறிவிப்பில் ரூ.37,200 என்று உள்ளது. ஆனால், அதில் கீழே கொடுக்கப்பட்ட Scholarship லிங்க்-ல் 2018-2019 எனக் குறிப்பிட்டு ரூ. 36,200 வழங்கப்படும் என இடம்பெற்று உள்ளது.