சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் எனப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி

பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பிரின்ஸ் பட நடிகை மரியாபோஷாப்க்கா புகாரிளித்துள்ளார்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2022 தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் நடிகை மரியாபோஷாப்க்கா, படப்பிடிப்பின் போது சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி புகார் அளித்து உள்ளதாக நக்கீரனின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

சில நாட்களுக்கு முன்பாக மண்டேலா இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” மாவீரன் ” திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால், அது புரளி என இயக்குநர் மடோன் அஷ்வின் கூறியதாக செய்திகள் வெளியான. இந்த செய்தியை நவம்பர் 7ம் தேதி நக்கீரன் வெளியிட்டு இருந்தது.

நக்கீரன் வெளியிடும் நியூஸ் கார்ட்டில் இருக்கும் எழுத்துக்களும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் உள்ள எழுத்துக்களும் வெவ்வேறாக உள்ளன. நவம்பர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் நடிகை புகார் என நக்கீரன் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. அது எடிட் செய்யப்பட்டது.

மேலும், ” நக்கீரன் பெயருடன் பரவும் இந்த செய்தி போலியானது. நக்கீரன் இதை வெளியிடவில்லை ” என வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து நக்கீரன் தரப்பில் மறுப்பு தெரிவித்துட்விட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.

Twitter link 

சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் பற்றி வன்மம் மற்றும் தவறான செய்திகளை சிலர் தொடர்ந்து பரப்பவே செய்கிறார்கள். திரைத்துறையில் எந்த பின்புலமும் இல்லாமல் நடித்து வரும் சிவகார்த்திகேயன் மீது நடிகை பாலியல் புகார் கொடுத்ததாக வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க : சிவகார்த்திகேயன் வாரிசு நடிகரா ? தமிழக சினிமா பற்றி ஒன்றும் தெரியாத வடஇந்திய ஊடகம் !

சில மாதங்களுக்கு முன்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் வாரிசு நடிகர் என்றும், அவரது தந்தை பெயர் கஸ்தூரி ராஜா என்றும் தவறானச் செய்தியை வடஇந்திய ஊடகமான லைவ் மின்ட் தளம் வெளியிட்டு இருந்தது.

முடிவு : 

நம் தேடலில், பிரின்ஸ் படப்பிடிப்பு நடக்கும் போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பிரின்ஸ் பட நடிகை மரியாபோஷாப்க்கா புகாரளித்துள்ளதாக பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader