அமெரிக்கப் பள்ளதாக்கில் கற்கள் தானாக நகரும் மர்மம் என்ன ?

பரவிய செய்தி

மரணவெளி..! கற்கள் தானாக நகரும் ஆச்சரியம். பல ஆண்டுகள் ஆராய்ச்சியிலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்.

மதிப்பீடு

சுருக்கம்

எது உண்மை :   மரணப் பள்ளத்தாக்கு (death valley) பகுதியில் கற்கள் நகர்வது பல வருடங்களாக மர்மமாகவே இருந்தது.

எது உண்மை இல்லை : இன்னும் மர்மமாகவே உள்ளது. யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல வருடங்களாக கண்டறியப்படாமல் இருந்த கற்கள் நகர்வது பற்றி பலரும் பல விளக்கங்களை அளித்துள்ளனர். அதில், ரிச்சர்ட் நேர்ரிஸ் கற்கள் நகர்வதற்கான காரணத்தை கண்டறிந்து விளக்கி உள்ளார்.

விளக்கம்

சமீபத்தில் தமிழ் ஊடகம் ஒன்றில், அமெரிக்காவில் உள்ள Racetrack playa மலைப் பகுதியில் இருந்து உடைந்து விழும் கற்கள் மரணவெளியில் தாமாக நகர்ந்து செல்கிறது. இவை எடை, அளவைப் பொருத்து நகருவதில்லை. மேலும், 40 ஆண்டுகள் ஆராய்ச்சியிலும் இதனைக் கண்டறிய முடியவில்லை என செய்தியில் இடம்பெற்று இருந்தன.

Advertisement

நகரும் கற்கள் :  

அமரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது Racetrack playa மலைப் பகுதி. இப்பகுதியில் உள்ள மரண பள்ளத்தாக்கு (death valley) ஏரிப் பகுதியில் கற்கள் தானாக நகர்வதற்கான காரணங்கள் பல ஆண்டுகள் ஆகினும் மர்மமாக இருந்தன. இதற்கு பின்னால் பல கதைகளும் கூறப்பட்டன.

ஏனெனில், அப்பகுதி மழைப் பொழிவு சில செ.மீ என குறைந்த அளவிலேயே காணப்படும் வறண்ட பகுதியாகும். மண்ணில் கற்கள் நகர்ந்து செல்லும் தடம் ஒரே பாதையில் இல்லாமல், பின்புறமாக மீண்டும் நகர்வது போன்றும் இருப்பதால் இதன் மீதான ஆச்சரியம் கூடியது.

எதனால் நகர்கின்றன ?

2011 ஆம் ஆண்டு கடல் ஆய்வு நிபுணரான ரிச்சர்ட் நோர்ரிஸ், அவருடன் ஜேம்ஸ் நோர்ரிஸ் உள்ளிட்ட குழு மரண பள்ளத்தாக்கில் கற்கள் எப்படி தானாக நகர்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினர். இதில், வானிலை ஆராய்ச்சிக் கருவிகள், கேமராக்கள், GPS பொருத்தப்பட்ட சோதனைக் கற்களை அங்கே விட்டுச் சென்றனர்.

Advertisement

சில ஆண்டுகள் கழித்து 2013-ல் மீண்டும் அப்பகுதிக்கு வந்து அங்கேயே தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டதில் கற்களின் நகர்விற்கான தீர்வு கிடைத்தது.

மரண பள்ளத்தாக்கு கோடைக் காலத்தில் அதிகம் வறண்டு காணப்படுகிறது. அதே பகுதி குளிர்க் காலங்களில் பனியால் மூழ்கி இருக்கும். மரண பள்ளத்தாக்கு 3,700 அடி உயரத்தில் உள்ள Racetrack playa-வில் உள்ளதால் பனிக் கட்டிகளால் சூழ்ந்து இருக்கும்.

கோடைக்காலத்தில் வெப்பம், காற்று ஆகியவற்றால் உருகியப் பனியின் உந்துதலால் கற்கள் நகர்த்தப்படுகின்றன என்பதை ரிச்சர்ட் நோர்ரிஸ் மற்றும் ஜேம்ஸ் நோர்ரிஸ் ஆராய்ச்சியில் வீடியோ ஆதாரத்துடன் நிருபித்து உள்ளனர்.

மரண பள்ளத்தாக்கு 2.8 மைல் கொண்ட வறண்ட ஏரி. அதைச் சுற்றி மக்களின் வாழ்விடங்கள் ஏதுமில்லை. கற்களின் நகர்வு தினந்தோறும் சிறிது சிறிதாக நகர்வதில்லை. மழைப் பொழிவு இல்லாமல் இருந்தாலும் வெப்பத்தால் பனி உருகி வரும் நீரால் கற்களின் நகர்விற்கு அந்த மண்ணை ஈரப்பதமாக்கி விடுகின்றன.

தமிழ் செய்தியில் கூறுகையில், எல்லாக் கற்களும் நகர்வதில்லை. சில கற்கள் ஒரு சில அடிகள் நகர்கின்றன, சில கற்கள் 600 அடி வரை நகர்கின்றன எனக் கூறியுள்ளனர். ஆம், ரிச்சர்ட் நோர்ரிஸ் அதற்கான ஆழமான அறிவியல் விளக்கத்தை வீடியோவில் அளித்துள்ளார்.

கற்களின் நகர்வு பற்றிய வீடியோவில் உருகிய பனி நீரில் நிலையாக நிற்கும் இரு கற்களை மேற்கோள்காட்டி அதற்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கல் நகர்வதை பார்க்க முடிந்தது

பருவ மாற்றத்தால் உருகிய பனி நீர் மூலம் கற்கள் நகர்கிறது என்பதில் இருந்து கற்கள் தானாக நகரவில்லை என்ற நீண்ட நாள் மர்மம் நீக்கப்பட்டுள்ளது. பூமியில் இதுபோன்ற பல மர்ம நிகழ்வுகள் நிகழ்ந்தும், நிகழ்ந்து கொண்டும் உள்ளன. இயற்கையின் நிகழ்வுகளை மர்மங்கள் என்பது ஏற்புடையது அல்ல.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button