This article is from Nov 12, 2018

உங்கள் செல்போனின் கதிர்வீச்சு அளவை அறிவீர்களா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

சுருக்கம்

*#07# என்ற எண்ணை டைப் செய்யும் போது உங்கள் செல்போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவைக் காணலாம். இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய பிராண்ட் செல்போன்கள் அனைத்தும் பாதுகாப்பான கதிர்வீச்சு அளவான 1.6 W/kg-க்கு கீழ் உள்ளன(2.6 W/kg இல்லை). இங்கு உட்புகும் சீனத் தயாரிப்புகளில் இதனை எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

அனைத்து செல்போன்களும் கதிர்வீச்சுக்களை வெளியிடுகின்றன என்பதே உண்மை. எனினும், அது பாதுக்காப்பான அளவு தானா என்பதை அறிந்திருத்தல் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் நல்லது.

 

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் டயல் பேடில் *#07# என்ற எண்ணை டைப் செய்யும் போதே படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று போன் வெளியிடும் கதிர்வீச்சு அளவான SAR பற்றிய விவரம் தெளிவாக வருகிறது.

SAR என்பது specific Absorption Rate information என்பதாகும். படத்தில் காட்டப்பட்டுள்ள ஸ்மார்ட்போனின் அதிகபட்ச SAR மதிப்பு 1.130 W/kg என்றுள்ளது. இது பாதுகாப்பான அளவு என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் SAR லிமிட் 1.6 Watts/kilogram எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிகையில்லாத அளவு கதிர்வீச்சு வெளியிடும் செல்போன்கள் பாதுகாப்பானவையே.

சிலரின் செல்போன்களில் இந்த எண்களை டைப் செய்யும் போது SAR பற்றிய விவரங்கள் ஏதும் வருவதில்லை, அதனால் அவை ஆபத்தானவை என்ற செய்தி பரவுகிறது.

இவ்வாறு பரவும் கூடுதல் தகவல்கள் உண்மையில்லை என்றே கூற வேண்டும். விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய செல்போன்களில் SAR பற்றிய விவரங்கள் வர வாய்ப்பில்லை. ஆகையால் அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இணையத்தில் உங்களின் செல்போன் பற்றிய விவரங்கள் பற்றி தேடித் தெரிந்து கொள்ளவும்.

“ புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்கள் SAR லிமிட் பற்றி விவரம் அறிந்து வாங்குதல் நல்லது. இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய பிராண்ட்களின் செல்போன்கள் பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சு அளவைக் கொண்டுள்ளன. ஆனால், பிரச்சனை யாதெனில் SAR பற்றி சோதனை செய்யாமல் விற்பனைக்கி உள்நுழையும் சீன செல்போன்கள் மற்றும் சந்தையில் விற்பனையாகும் உள்ளூர் செல்போன்கள் மட்டுமே ஆபத்தானவை “ என இந்திய செல்லுலார் சங்கத்தின் செயலாளர் அதார்ஸ் சாஸ்திரி பத்திரிகையில் தெரிவித்து உள்ளார்.

SAR கதிர்வீச்சு அளவு பற்றி அறிதல் நல்லதே. எனினும், கூடுதலாக இணைக்கப்படும் பயமுறுத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader