பரவிய செய்தி
பின்னாளில் மொபைல் போன், ஸ்மார்ட் போன் வரப்போவதை முன்னாளில் அறிந்து அவற்றை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லில் செதுக்கினானோ தமிழன் !

Facebook link | archive link
மதிப்பீடு
விளக்கம்
தமிழனின் தொன்மையான வரலாறுகள், கட்டிடக்கலை, சிற்ப வேலைப்பாடுகள் போன்றவை உலக அளவில் தனித்துவமாக விளங்குகிறது. எனினும், சமூக வலைதளங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கணித்த விசயங்கள் என பல செய்திகள் பகிரப்படுவதுண்டு.
அவற்றில் ஒன்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட சிற்பத்தில் பெண்கள் இருவர் செல்போனில் பேசுவது போன்றும், பயன்படுத்துவது போன்றும் இருப்பதாக இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

Facebook link | archive link

S.periandavan erode endra முகநூல் பக்கத்தில், ” பின்னாளில் மொபைல் போன், ஸ்மார்ட் போன் வரப்போவதை முன்னாளில் அறிந்து அவற்றை எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்லில் செதுக்கினானோ தமிழன்! ” என வெளியான பதிவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர் சிற்பம் எனக் கூறும் சிற்பத்தின் வடிவமைப்பு தமிழர் கட்டிடக்கலை வடிவில் இல்லை என்பது போல் தோற்றமளிக்கிறது. ஆகையால், தமிழரின் சிற்ப வேலைப்பாடு என வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடுகையில்,
shunya.net என்ற இணையதளத்தில் சிற்பத்தின் புகைப்படம் பதிவாகி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் பாவன்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா பகுதியில் உள்ள கோவிலுல் இருந்தே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பாலிதானா பகுதி சமண கோவில்கள் நிறைந்த பகுதியாகும். தனியாகவும், மலையில் உச்சியில் அழகாக செதுக்கப்பட்ட 860 சமண கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் சில கோவில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அடிவாரத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் மலையில் அமைந்துள்ள கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.
shunya.net என்ற இணையதளத்தில், ” அலங்கரித்தல் மற்றும் கடிதம் எழுதுதல் ” என்ற தலைப்பின் கீழே தமிழர் சிற்பம் என வைரலாகும் இரு பெண்களின் சிற்பம் இடம்பெற்று இருக்கிறது. அந்த தளத்தில், செல்போன் பயன்பாடு என்பது போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.
செல்போன் பேசுவதாக பரவும் சிற்பத்தை மற்றொரு கோணத்தில் காணுகையில் அப்பெண் தன் கண்ணை அழகுபடுத்துவது போன்று சிற்பமாக அமைக்கப்பட்ட ஒன்று. எனினும், இந்த சிற்பம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டது என்று தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
இதற்கு முன்பாகவும், தமிழர்கள் கணித்து விட்டு சென்ற சிற்பங்கள் என பல தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது தொடர்பாக கட்டுரைகள் வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் செதுக்கிய செல்போன் பேசும் சிற்பம் என வைரல் செய்யப்படுவது குஜராத் மாநிலத்தில் உள்ள சமணக் கோவிலில் உள்ள சிற்பம் மற்றும் அந்த சிற்பத்தில் பெண் அலங்கரித்துக் கொள்வதே வடிவமைக்கப்பட்டுள்ளது .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
Ask YouTurn
ஆதாரம்