ஸ்மிருதி இரானி பெல்லி டான்சர் உடையில் இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

பரவிய செய்தி
காபரே டான்சர கட்சியில் சேர்த்து, மந்திரி பதவியும் கொடுத்த இந்த யோக்கியன்கள் தான், கணவன் இறந்த பிறகும், இந்த நாட்டின் மீது உள்ள அன்பினால், தன் வாழ்நாளை அர்ப்பணித்து இருக்கும் சோனியா காந்தியை பார் டான்சர் என்று பரப்பியது
மதிப்பீடு
விளக்கம்
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 அன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக மோடி தலைமையிலான அரசு திறம்பட செயல்படாததைக் கண்டித்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதாக கடந்த இரு நாட்களாகவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு வருகிறது
இதைத்தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழைந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானிக்கு, ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் கூறி பாஜகவினர் பொய்யான குற்றச்சாட்டைச் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மிருதி இரானி பெல்லி நடனமாடும் (Belly Dance) உடையில் இருப்பதாகக் கூறிய புகைப்படம் ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
இதெல்லாம் உண்மையா
நமக்கு இதெல்லாம் தெரியவே இல்லையே 🤔 pic.twitter.com/4fXXbYhWHc— ஆதிரன் ❤️ (@Aathiraj8586) August 10, 2023
अंधभक्तों की मम्मी, बहुत मेहनत बाद ये pick हाथ लगी है !! pic.twitter.com/lrfn6ELeEn
— ਬੀਬੋ ਭੂਆ (@BeeboBhua) December 18, 2022
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்ற உண்மையை அறிய முடிந்தது.
மேலும் இதுகுறித்து தேடிய போது, இதன் உண்மையான புகைப்படத்தை Trip advisor என்ற இணையதளத்தில் கண்டுபிடித்தோம். அதில் “துருக்கிய BBQ இரவு உணவகத்தில் பெல்லி நடமாடுபவர்‘ என்ற தலைப்புடன் இந்தப்புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் உண்மையான புகைப்படத்தை போட்டோசாப் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி டான்ஸ் ஆடிய புகைப்படம், நீச்சல் உடையில் இருந்த புகைப்படம் எனக் கூறி எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இதற்கு முன்பு சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஸ்மிருதி இரானி வடிவில் அம்மாவை கண்டேன்.. எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
இதற்கு முன்பும் ஸ்மிருதி இரானி குறித்து பல செய்திகள் பரப்பப்பட்டன. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !
மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் ஆபாசமாகப் பேசியதாக எடிட் வீடியோவைப் பரப்பிய பாஜகவின் அமித் மாள்வியா !
முடிவு:
நம் தேடலில், நடன உடையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருப்பதாகப் பரவிவரும் புகைப்படம் போலியானது என்பதையும், உண்மையான புகைப்படம் துருக்கி நாட்டில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.