This article is from Dec 18, 2020

Snapdeal நிறுவனம் பெயரில் கார் பரிசளிப்பதாக மோசடி| மெசேஜ்களை நம்பி பணத்தை இழக்காதீர்!

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதற்காக குலுக்கல் முறையில் உங்களின் எண்ணிற்கு ரூ.12,80,00 மதிப்புள்ள Mahindra XUV 50 மாடல் கார் பரிசாக விழுந்து உள்ளதாகவும், அதற்கான பதிவு தொகையாக 12,800 ரூபாய் செலுத்த வேண்டும் என Snapdeal வணிக நிறுவனத்தின் பெயரில் சான்றிதழ், மெசேஜ்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தனிநபர்களுக்கு பிரத்யேகமாக வருகிறது.

Snapdeal நிறுவனம் கார் பரிசு அளிப்பதாக வரும் செய்திகள் முற்றிலும் மோசடிகளே. கார் பரிசாக கிடைப்பதாக எண்ணி பலரும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி விடுகின்றனர். இதனால் தங்கள் பணத்தை பலரும் இழந்து ஏமாற்றமடைகின்றனர். அந்நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.

2020 ஆகஸ்ட் மாதம் consumercomplaintscourt.com எனும் இணையதளத்தில் Snapdeal தளத்தில் இருந்து தனக்கு கார் பரிசாக விழுந்ததாக வந்த மோசடி குறித்து ஒருவர் புகார் அளித்து இருந்தார். அதில் இடம்பெற்ற சான்றிதழில் பெயர், முகவரி மட்டுமே மாறி இருந்தன, பதிவு எண் உள்ளிட்டவை ஒன்றாகவே இருந்தன.

கடந்த ஆண்டு Snapdeal நிறுவனம் 12 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி காரை பரிசாக வழங்குவதாக மோசடி மெசேஜ்கள் வந்துள்ளன.

Snapdeal உடைய இணையதளத்தில், தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பரிசு விழுந்ததாக வரும் அழைப்புகள்/இமெயில்/ எஸ்எம்எஸ் போன்றவற்றிக்கு பதில் அளிக்க வேண்டாம் எனப் பதில் அளித்து உள்ளனர்.

மேலும் படிக்க :  வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சம்பாதிக்கலாம் என பரவும் மோசடி !

தங்கள் ஊர்களில் Snapdeal நிறுவனத்தின் பெயரில் மோசடிகள் நிகழ்ந்து பணத்தை இழந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும், கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

Archive link

ஆன்லைன் வணிக தளங்களின் பெயரில் போலியான தளங்கள், மோசடிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை நாம் பதிவிட்டு வருகிறோம். இலவசமாக வருகிறது என எண்ணி மோசடிக்குள் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க : ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக பரவும் மோசடி செய்தி !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader