சூரியகிரகணத்தின் போது உணவு உண்ட கர்ப்பிணி பெண் இறந்ததாக வதந்தி !

பரவிய செய்தி

திராவிடர் கழகத்தின் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்பு!

நிகழ்வின்போது ஒருகர்ப்பிணிப் பெண் மயங்கியதால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம். பாதி நிகழ்வோடு ரத்து செய்யப்பட்டது.

மதிப்பீடு

விளக்கம்

அக்டோபர் 25ம் தேதி சூரியகிரகணம் நிகழ்ந்தது. சூரியகிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் உணவு உண்ணக் கூடாது. கை கால்களை அசைக்கக் கூடாது. வெளியில் வரக் கூடாது என மூட நம்பிக்கைகள் உள்ளன. 

Advertisement

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் ‘கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் உணவு உண்டனர். 

அந்நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு கர்ப்பிணிப் பெண் மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காலமானதாகவும் ஒரு நியூஸ் கார்ட் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

Archive twitter link 

Advertisement

இதனை பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது டிவிட்டர் பக்கத்தில் “இது உண்மையா” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ?

பரப்பப்படும் நியூஸ் கார்டில் சன் நியூஸ் என இருப்பதைப் பார்க்க முடிகிறது. இது குறித்து சன் நியூஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். அதில் அக்டோபர் 25ம் தேதி இந்த நியூஸ் கார்ட் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால் அதில், திராவிடர் கழகத்தின் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பு!” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிகழ்வு குறித்து வீடியோவினையும் சன் நியூஸ் Youtube பக்கத்தில் காண முடிந்தது. இந்நிகழ்ச்சியில் எழிலரசி (9 மாதம்) மற்றும் சத்தியா (5 மாதம்) என்ற கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். 

அதில், சூரியகிரகணத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது, உணவு உண்ணக் கூடாது என்ற அச்சத்தினை உருவாக்கியுள்ளனர். அதனை போக்குவதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு உண்ணதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண் காலமானார் என வதந்தி பரவுவதாகப் பெரியார் வலைக்காட்சியில் வீடியோ ஒன்றினை அக்டோபர் 27ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

அவ்வீடியோவில் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் பேசியுள்ளனர். அதில், அக்டோபர் 25ம் தேதி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அதில் கலந்து கொண்டு உணவு உண்ட எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை, நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கடந்த 2019ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணாக இதே போன்ற சூரிய கிரகண குறித்த மூடநம்பிக்கை விழிப்புணர்வு  நிகழ்வில் பங்கேற்ற சீர்த்தி, பகலவன் தம்பதியினர் அவர்களது மகன் மகிழனுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், திராவிடர் கழகம் நடத்திய கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண் மரணம் என சமூக வலைத்தளங்களில் பரவக்கூடியது உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. அக்கர்ப்பிணி பெண்கள் நலமாக உள்ளனர்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button