இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் | எப்பொழுது நிகழ்ந்தது ?

பரவிய செய்தி

இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்.

மதிப்பீடு

விளக்கம்

மெரிக்க ராணுவ வீரர்கள் இசைக்குழு இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ முகநூலில் பகிரப்பட்டு வருகிறது. அதே வீடியோவை யுடர்ன் ஃபாலோயர் ஒருவர் பகிர்ந்து, அதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோ குறித்து தேடிய பொழுது எகனாமிக் டைம்ஸ், NDTV, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்டவையில் வெளியாகிய செய்திகளை காண முடிந்தது.

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்திய ” Yudh Abhyas ” 2019 எனும் ராணுவ கூட்டுப்பயிற்சி வாஷிங்க்டன் டி.சி-யின் Lewis McChord பகுதியில் செப்டம்பர் 5-ம் தேதி துவங்கியது. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி நிறைவடைந்த நாளில் அமெரிக்க ராணுவ வீரர்களின் இசைக்குழு ” ஜன கன மன ” பாடலை வாசித்து உள்ளனர்.

Yudh Abhyas ஆனது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ராணுவ கூட்டுப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த முயற்சிகளாகும். சமீபத்தில் நிகழ்ந்த கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கு இடையேயான 15-வது பதிப்பாகும்.

அமெரிக்க ராணுவ வீரர்கள் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் வீடியோவை ANI என்ற செய்தி நிறுவனம் ட்விட்டரில் செப்டம்பர் 18-ம் தேதி வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button