சோனியா காந்திக்கு பின்னால் “இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி” என்ற புத்தகம் இருந்ததா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசுவது போல் அமைந்து இருக்கும் புகைப்படத்தில், அவருக்கு பின்னால் ” How to convert India into Christian nation ” எனும் இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது தொடர்பான புத்தகம், பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் சோனியா காந்தி புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2020 நவம்பரில் வெளியான NDTV, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் சோனியா காந்தியின் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஆனால், அந்த புகைப்படத்தில் ” How to convert India into Christian nation” மற்றும் பைபிள் புத்தகம் உள்ளிட்டவை இடம்பெறவில்லை என்பதை காணலாம்.
அதே உடை மற்றும் பின்னணியில் பீகார் மாநில மக்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசிய வீடியோ காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலில் 2020 அக்டோபர் 27-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பேசும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் ” How to convert India into Christian nation “, பைபிள் மற்றும் இயேசு சிலை இருப்பதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என அறிய முடிகிறது.