சோனியா காந்தியின் டான்ஸ் என தவறாக பரப்பப்படும் புகைப்படம் !

பரவிய செய்தி
ஆச்சாரமான சோனியா bar-ல் ஆச்சாரமாக நடனம் ஆடிய போது எடுத்தபடம்.
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அரசியல் ரீதியாக விமரித்து வருபவர்கள் அவரை இத்தாலி நாட்டின் பார் டான்சர் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். தற்போது, இத்தாலி நாட்டில் பார் டான்சர் ஆக இருந்த சோனியா காந்தியின் புகைப்படம் என மேற்காணும் புகைப்படமானது இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழில், பீட்டர் அல்போன்ஸ் என்பவருக்கு பதில் அளிக்கும் வகையில் சோனியா காந்தியை பார் டான்சர் என விமர்சித்து மீம்ஸ் பரப்பி உள்ளனர். இந்த பதிவில் இடம்பெற்று இருக்கும் புகைப்படம் குறித்து ஆராய்ந்து பார்த்த பொழுது, அது தவறான புகைப்படம் என தெரிய வந்தது.
மீம்ஸில் உள்ள நடனமாடும் புகைப்படத்தை தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” vintage rockabilly dance” என நடனமாடும் புகைப்படத்தின் முழுமையான பதிவு கிடைத்தது.
” vintage dance ” புகைப்படத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை க்ராப் செய்து சோனியா காந்தி பாரில் நடனமாடுவதாக புரளியை உருவாக்கி இருக்கிறார்கள். உண்மையான புகைப்படத்தை ஆராய்கையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான : Warner Bros ” உடைய லோகோ உடன் ஓர் புகைப்படம் கிடைத்தது.
இந்தி மொழியில், சோனியா காந்தியின் பார் டான்ஸ் புகைப்படம் என நடிகை மர்லின் மன்ரோ உடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இந்திய அளவில் தவறாக பரப்பினார்கள் என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க : சமூக வலைதளத்தில் இளம் பருவ சோனியா காந்தி என தவறான படங்கள் !
அதேபோல், பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் சோனியா காந்தியின் இளம் பருவத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் என ஜேம்ஸ் பாண்ட் நடிகையின் புகைப்படத்தை பரப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம்முடைய தேடலில், சோனியா காந்தி இத்தாலியில் பாரில் நடனமாடும் புகைப்படம் என பரப்பப்படும் புகைப்படம் தவறானது என அறிய முடிகிறது.