குடையுடன் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்.. பழைய படத்தை திமுக ஆட்சியென பரப்பும் பாஜக செயற்குழு உறுப்பினர் !

பரவிய செய்தி

தமிழகத்தின் அவல நிலை! இதில No 1 பட்டம் வேற! லண்டன் அமெரிக்காவை விட தமிழ்நாட்டில் மழைக்கு முன்கூட்டியே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது!

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கும் பொழுது மழையின் காரணமாகக் குடை பிடித்துக் கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Twitter Link

மேலும், பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி ஆளும் தமிழக அரசை விமர்சிப்பது போன்ற தொனியில் வைரலான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

உண்மை என்ன ?

சமூக வலைத்தளங்களில் வைரலானப் புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடியதில் 2014ம் ஆண்டில் இருந்தே இந்தப் புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டிருப்பது தெரியவந்தது. பெரும்பாலும், நையாண்டிப் பதிவாகவே இவை அனைத்தும் இருக்கிறது.

kienthuc.net.vn எனும் தலைப்பில் 2014 செப்டம்பர் 23ம் தேதி தற்போது வைலான புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Website Link

மேலும், scoopwhoop இணையத்தளம் This driver who’s got a specialist rain cover for his seat எனும் தலைப்பில் 2015 செப்டம்பர் 2ம் தேதி இந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்துள்ளது.

trailwaysuk எனும் இணையத்தளத்தில் 2015 மார்ச் 5ம் இந்தப் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் அதிக மழைப் பொழிவு நிகழ்ந்து வரும் வேளையில் சில அரசு பேருந்துகளில் தண்ணீர் ஒழுகும் சம்பவங்கள் நிகழ்வது குறித்து செய்திகளில் வெளியாகி வருகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படம் இப்போது நடக்கவில்லை என்பது தெரியவருகிறது.

தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி தொடர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களைத் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகிறார்.

மதக் கலவரம் தூண்டும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எனச் சௌதா மணி மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கில், அவருடைய பதிவு அரசுக்கு எதிராக மட்டும் அல்ல நீதித்துறைக்கு எதிராகவும் உள்ளது என அவர் கொடுத்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

அவர் பரப்பிய பொய்களை ஏற்கனவே Youturn தளத்தில் Factcheck செய்துள்ளோம்.

மேலும் படிக்க :

பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக 2019-ல் நிகழ்ந்த வீடியோவை பரப்பும் பாஜகவின் செளதா மணி !

பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை வைப்பதாகப் பரப்பும் போலிச் செய்தி கார்டு!

முடிவு :

நம் தேடலில், தமிழகத்தின் நிலை என ஓட்டுநர் ஒருவர் குடைப்பிடித்து அரசு பேருந்தை இயக்குவதாக பாஜகவின் சௌதா மணி பதிவிட்ட புகைப்படம் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இணையத்தில் பரவி வருவது தெரிய வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader