முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் தங்கத்தில் கழிப்பறை என வதந்தி !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறை இருந்ததாக சில புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2016 செப்டம்பரில் newyorker எனும் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த தங்க கழிப்பறை நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சோதனை நடத்திய பிறகு கட்டுக்கட்டாக பணம் கிடைத்ததாகக் கூறி பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் செய்தனர் என நாம் முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : எஸ்.பி வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் எனப் பரவும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !
அதேபோல், தற்போது வேலுமணி வீட்டில் தங்க கழிப்பறை இருப்பதாக இணையத்தில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் தங்கத்திலான கழிப்பறை என பரப்பப்படும் தகவல் வதந்தியே. அந்த புகைப்படம் அமெரிக்காவைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.