This article is from Aug 10, 2021

எஸ்.பி வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் எனப் பரவும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு !

பரவிய செய்தி

வேலுமணி அக்கா வீட்டில் சிக்கிய சில்லரை காசுகள்

Twitter link | Archive link 

A1 வழியில் கொள்ளை அடித்து சேர்த்து வைத்த அதிமுக அமைச்சர் ஊழல் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளிடம் சிக்கிய பண குவியல்களின் ஒரு பகுதி. அவரை கைது செய்ய கூடாது என்று ரோஸ் மில்க்காக தெருவில் நிற்கும் மக்கள்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் உறவினர்கள் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்டவையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி உடைய வீட்டில் மற்றும் அவருடைய அக்கா வீட்டில் சிக்கிய பணம், நகைகள் என சில பழைய மற்றும் தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

புகைப்படம் 1 : 

முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016-ல் பணமதிப்பிழப்புக்கு பிறகு நடத்தப்பட்ட ரெய்டுகளில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் என இப்புகைப்படம் பிசினஸ் டுடே மற்றும் எகனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

புகைப்படம் 2 : 

அடுத்த பதிவுகளில் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை இதற்கு முன்பாக பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என தவறாக பரவியது. இது 2020-ல் நாகையில் பொறியாளர் வீட்டில் சிக்கிய லஞ்சப் பணம்.

மேலும் படிக்க : பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எனப் பரவும் பழைய புகைப்படம் !

புகைப்படம் 3 : 

அடுத்ததாக பெட்டிகளில் கட்டுக்கட்டாக இருக்கும் பணத்தின் புகைப்படம் 2019 நவம்பர் 11-ம் தேதி நியூஸ் 18 இணையதளத்தில் வெளியான செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க : தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் 200 கோடி சொகுசு பங்களாவா ?

இதற்கிடையில், எஸ்.பி வேலுமணியின் சொகுசு வீடு என பழைய வதந்தி வீடியோவையும் மீண்டும் பரப்பி வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சம்பந்தமான சோதனைகளில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், கட்டுக்கட்டாய் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக புகைப்படங்கள் அல்லது விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் மற்றும் அவரின் உறவினர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் என பரப்பப்படும் புகைப்படங்கள் தவறானவை, அவை பழைய புகைப்படங்களே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader