This article is from Dec 04, 2021

சென்னையில் நடுத்தர மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை எனப் பரவும் 2015 வெள்ள வீடியோ !

பரவிய செய்தி

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் சொல்வார்கள் இந்த ஒரு பெண்மணி குமுறல் மொத்த சென்னை மக்களின் குரலாக எடுத்து கொள்ளலாம்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களின் குரல்களும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், நடுத்தர மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. எங்களை பார்க்க யாரும் வரவில்லை. சாப்பாடு தண்ணீர் இல்லை என வயதான பெண் ஒருவர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டி வீடியோவின் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

சென்னை மழைப் பாதிப்புடன் பரப்பப்படும் இவ்வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ.

2015 டிசம்பர் 3-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தியில் ” நிவாரண உதவிகள் இல்லாமல் மக்கள் கதறல் ” எனும் தலைப்பில் வெள்ள நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என மக்கள் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டி அளித்த முழுமையான பேட்டி இடம்பெற்று இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சென்னை மழை பாதிப்பில் நடுத்தர மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுவதாகப் பரப்பப்படும் வீடியோ 2015 சென்னை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader