This article is from Feb 07, 2020

இலங்கை திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் கோவிலா ?| ஃபோட்டோஷாப் பதிவு.

பரவிய செய்தி

இது ஸ்ரீலங்காவின் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் கோவில். இந்த கோயில் ராவணனால் கட்டப்பட்டது. பெரிதாக்கவும், கோவிலின் நுழைவாயிலைப் பார்க்கவும்.
இது ஆச்சரியமாக இருக்கிறது. பாறை மீது கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள் நன்றி. சிவசிவ …

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

இலங்கையில் உள்ள திருகோணமலையில் ராவணனால் கட்டப்பட்ட கோணேஸ்வரம் கோவில் என கடலுக்கு நடுவே உள்ள பாறையின் மீது இருக்கும் கோவிலை தண்ணீரில் இருப்பவர்கள் கையெடுத்து வணங்கும் புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் நீண்ட நாட்களாகவே பரவி வருகிறது.

அப்படி பகிரப்படும் புகைப்படத்தை பார்க்கும் பொழுதே ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. எனினும், அப்புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பதாக சில வரிகளை இணைத்து பதிவிடுகின்றனர். இறை நம்பிக்கை உள்ள சிலரும் அப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என அறியாமலே பகிரவும் செய்கின்றனர். இந்த பழக்கம் மாறியபாடில்லை.

முதலில், அந்த புகைப்படத்தில் கடலுக்கு நடுவே தனியாக செங்குத்தாக இருக்கும் பாறை அல்லது மலையின் மிச்சம் ஆனது தாய்லாந்து நாட்டின் புக்கெட் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மலைகள் நிறைந்த தீவு பகுதியாகும். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தையே பயன்படுத்தி உள்ளனர்.

Youtube link | archived link 

அடுத்ததாக, இலங்கையின் திருகோணமலையில் உள்ள கோணேஸ்வரம் அல்லது திருக்கோணேச்சரம் கோவில் அமைக்கப்பட்ட காட்சியை வீடியோவில் காணலாம். இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் அமைந்து இருக்கும் கோணேஸ்வரம் கோவில் பிரபல சிவன் ஆலயமாகும். இங்கு அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் உண்டு.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader