இலங்கை தேவாலயத்தில் மாதா சிலை கண்ணில் கண்ணீரா ?

பரவிய செய்தி

இலங்கை குண்டு வெடிப்பை முன்கூட்டியே உணர்த்திய மாதா சிலை. இன்று குண்டு வெடித்த நிலையில் நேற்று கண்ணீர் சிந்தியது.

மதிப்பீடு

விளக்கம்

இலங்கையில் நேற்று(ஏப்ரல் 21) தொடர்ச்சியாக எட்டு குண்டுகள் வெடித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இலங்கையின் கொழும்பு, கொழும்பு கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயம் நீர் கொழும்பு, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி  நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டகளப்பு ஆகிய பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக அசம்பாவிதம் நடக்க உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் தென் இலங்கையில் உள்ள தேவாலயம் ஒன்றில் மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக இணையத்தில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

தென்னிலங்கையின் களுத்துறை(கட்டுகுறுத்த) பகுதியில் அமைந்து இற்கும் செயின்ட்.பிலிப் நேரிஸ் தேவாலயத்தில் உள்ள புனித மாதா சிலையின் கண்களில் கண்ணீர்(இரத்தம் என சில பதிவுகள்) ஆனது குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு முந்தைய நாளில் தென்பட்டதாக எழுதி வருகின்றனர்.

மாதா சிலையை மக்கள் புகைப்படங்கள் எடுக்கும் காட்சிகளும் வெளியாகி வருகின்றனர். இருப்பினும், சிலையில் இருந்து கண்ணீர் அல்லது இரத்தம் வருவது சாத்தியமில்லாதது.  சமீபத்தில் புனித வெள்ளி தினம் வந்த பொழுது மக்கள் தேவாலயத்திற்கு அதிகம் சென்று புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டதில் வைரலாகி இருக்கக்கூடும்.

அந்த மாதா சிலை இயேசுவை கையில் ஏந்தி கண்ணீர் சிந்துவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின் படத்தை பகிர்பவர்கள் கீழே இருக்கும் இயேசுவின் சிலையை காணவில்லை. மேலும், புகைப்படங்களை நன்றாக பார்க்கும் பொழுது மெழுகு போன்று உறைந்து இருப்பது தான் தென்படுகிறது. கண்ணீரோ அல்லது இரத்தமோ அல்ல.

இதற்கு முன்பும் இலங்கையில் மாதா சிலையில் கண்ணீர் வந்ததாக பல ஆண்டுகளாக எழுதி வருகின்றனர் சில இணைய பக்கங்கள். ஆனால், அவற்றிற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை எனலாம். மாதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக, அதை காண மக்கள் அதிகம் சென்றதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தளங்களிலும் இடம் பெறவில்லை. எந்த செய்தியிலும் குறிப்பிடவில்லை.

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பே மாதா சிலையில் கண்ணீர் வந்ததாக தவறான தகவலை தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக இலங்கையில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close